வியாழன், 16 பிப்ரவரி, 2017

Alternative grassroot activist Shanmugam Muttulingam passes away

Alternative grassroot activist Shanmugam Muttulingam passes away

[TamilNet, Tuesday, 14 February 2017, 22:51 GMT]
Mr Shanmugam Muttulingam who was an alternative institution himself in serving and inspiring the Eezham Tamil society particularly at its grassroot level, passed away in Jaffna on Tuesday early hours at the age of 77. A student of Professor Kanapathippillai at the Peradeniya University in the early 1960s, but relinquishing his university education and later his law college career too, Mr Muttulingam was associated with the activities of the Peking-Wing Communist Party of N. Shanmugadasan. At the time of his demise, Mr. Muttulingam was engaged in the rejuvenation of grassroot institutions such as the century-old YMHA and an orphanage started in the 1930s at his own village Thirunelveali in Jaffna. The last wish of Mr Muttulingam was not to observe any religious rituals for his funeral.
Shanmugam Muttulingam
Shanmugam Muttulingam
The funeral of Mr Muttulingam will be held as per his wishes at Thirunelvealy in Jaffna on Wednesday, informed circles said.

Mr Muttulingam became a renowned English teacher, first to serve at St. Patricks in Jaffna, then to serve for nearly 25 years in the capital and various islands of the Republic of Maldives and finally to be invited to teach at St John’s in Jaffna, even in his retirement age.

Whether in Jaffna or was absconding in the remote islands of the Maldives due to then prevailing conditions in Ilangkai, Mr Muttulingam was always known to academic, social and aesthetic circles of Eezham Tamils and was always looked upon for his alternative thinking and outspoken ways.

He was a wealth of knowledge of his times that has gone untapped.

Wherever he was, he had charity a priority in his mind, loved his students whoever they might be, and in turn was always loved by them.

When a person like Mr Muttulingam came forward to do certain things at the grassroots of his society, assistance came unassumingly from the diaspora trusting his personality that was never seeking anything personal.

Mr Muttulingam was a unique model desperately needed by our times.

Coming from elite echelons of Jaffna society, two pieces of his thoughts written in Tamil and circulated to his friends and admirers a couple of weeks before his demise, would tell his personality. They are presented herewith with tributes to him.

Mr Muttulingam leaves behind his wife and three children.

* * *

A letter from God to Tamils: a feature written in Tamil by Mr Muttulingam in January 2017 and circulated to his friends and admirers:

கடவுளிடமிருந்து தமிழர்களுக்கு ஒரு கடிதம்

பிரபஞ்ச சக்தியேதான் 'கடவுள்' என்றால், 'கடவுள்' தமிழருக்கு
ஒரு கடிதம் எழுதினால், அது பின்வருமாறு அமையக் கூடும் >>

தமிழர்களே,

உம்மில் பலர் என்னைச் சிவபெருமான் என அழைக்கிறீர்கள். நான் சுடுகாட்டில் உறைவதாகக் கூறுகிறீர்கள். நான் பிரபஞ்ச நடனம் ஆடுவதாகக் கூறுகிறீர்கள். எனது நடனத்துக்கு நானே உடுக்கு அடிப்பதாகக் கூறுகிறீர்கள்.


உடுக்கு ஒரு தோல் வாத்தியம்.
அது 'பறை' வாத்தியக் குடும்பத்தில் ஒன்று.

உம்மில் ஒரு சாரார் --தாம் 'உயர்ந்த சாதி' எனவும்
பறை அடிப்பவர்கள் 'கீழ் சாதி' எனவும் கூறுகின்றனர்.

அப்படியானால்,உடுக்கு அடிக்கும் என்னையும்
'கீழ்சாதிப் பறையன்' என அழைக்க வேண்டும்!

எனது பெயரால், மதம் ஒன்றை உருவாக்கித்
தம்மைச் 'சைவர்கள்' என அழைப்பவர்கள் தாம்
'பறையர்கள்' எனப் பிரகடனம் செய்ய வேண்டும்.


'உயர் சாதி' / 'கீழ் சாதி' என்னும் சமூகப் பிரிவினைகளை
உடனடியாகக் கைவிட வேண்டும். அல்லது, எனது
பெயரில் இயங்கும் சைவ சமயத்திலிலிருந்து 'உயர்
சாதியினர்' எனத் தம்மை அழைப்பவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் !

நான் பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி.
பிரபஞ்சம் முழுவதிலும் நான் ஊடுருவியுள்ளேன்.
உம்மில் ஒவ்வொருவரிலும் நான் இருக்கிறேன்.


சகல சீவராசிகளிலும் 'சீவனாக' நானே இருக்கிறேன்.

உருவமற்ற எனக்கு -- நீங்கள் உருவங்கள் படைத்ததும், கோவில்கள் கட்டியதும் எனக்குச் சடங்குகள் திருவிழாக்கள் செய்வதும் -- யாவுமே தவறு!
உடனடியாக இவற்றைக் கைவிடுக!


இருக்கும் கோவில்கள் சிலைகளை உடைக்கத் தேவையில்லை.

கோவில்களைக் கலை - கலாச்சார - கல்வி - சமூக சேவை நிலையங்களாகப் பயன் படுத்துங்கள்.

சிலைகள் பாதுகாக்கப் படட்டும் ... ஆனால், சிலைகளுக்குப் பூசைகள் சடங்குகள் செய்வதை நிறுத்துங்கள்.

சைவர்கள் என உம்மை அழைப்பவர்கள் -- உருவ வணக்கத்தைக் கைவிட்டு, மனத்தினால் மட்டும் என்னை வழிப்படப் பழகுங்கள் !

உங்கள் எல்லாரிலும் நான் இருக்கிறேன்.
இதனால் எல்லோரும் சமம்.

உயர்சாதி / கீழ்ச்சாதி என நீங்கள் நடந்துகொள்வது உமக்கும் அவமானம். எனக்கும் அவமானம்.

மறுபடியும் கூறுகிறேன். தாம் 'உயர்சாதி' என நினைப்போர் -- தம்மைச் 'சைவர்கள்' எனக்கூறாது இருப்பார்களாக. சைவ சமயம் என நீங்கள் பின்பற்றும் சமயத்தில் இருந்து 'உயர்சாதி' - 'ஆணவக்காரர்' விலகுவார்களாக. !

புதிதாகக் கோவில்கள் கட்டாதீர். கோவில்களுக்குப் பதிலாகக் கலை - கலாச்சார - கல்வி - சமூக சேவை நிலையங்கள் கட்டுங்கள்.

வீடுகளிலிருந்தும் / மரங்களின் கீழும் - வெட்ட வெளிகளில் நின்றும் என்னை வணங்குங்கள் !

பக்திநெறி வழிநின்று சித்த மலம் அறுத்திடுங்கள் !

எனக்கும் உங்களுக்கும் நடுவில் இடைத்தரகர்கள் நுழைய அனுமதிக்காதீர் !

உமது வழிகாட்டுதலுக்காகத் தமிழ்ப் பெரியோர் கூறி வைத்துள்ள பல நல்ல அறிவுரைகளில் சிலவற்றை நினைவூட்டுகிறேன் ...

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் அவன் தாள் நினை ...

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ...

சித்தத்தைச் சிவன் பாலே வைத்தார்க்கு அடியேன் ...

'கடவுள்' பிறப்பிலி / உருவிவி / பெயரிலி.

சக்தி சிவம் ...

சீவன் சிவம் ... ஊனுடம்பு ஆலயம் ...

அன்பே சிவம் ... ஒன்றே குலம் ... ஒருவனே தேவன் ...

இறை உள்ளில் ஒருங்கே!

அன்பின் வழியது உயிர்நிலை ...

சாதி இரண்டு -- இட்டார் பெரியோர் ... இடாதோர் இழிகுலத்தோர்!

யாதும் ஊரே ... யாவரும் கேளிர்!
(பிரதேச வாதம் / சாதீயம் / இனவாதம் ... யாவும் தவறு)

இங்ஙனம்,

பிறப்பற்ற, உருவற்ற, பெயரற்ற, பிரபஞ்ச சக்தி --

உங்களைப் பொறுத்தவரை, பறையன் சிவபெருமான்

* * *

Another feature by Mr Muttulingam written in continuation to the earlier feature:

தெய்வம் : யேசு பிரான் / தமிழ்ச்சித்தர்கள்

பிரபஞ்ச சக்தியே 'தெய்வம்' என நம்பப்படுகிறது ...

பிரபஞ்சம் முழுவதும் ஊடுருவியுள்ள
சக்தியின் சிறுகூறு எமக்குள்ளும் உண்டு ...

எனவே எமக்குள்ளும் தெய்வம் உண்டு !

எமக்குள்ளும் தெய்வம் உண்டு என்பதை வலியுறுத்தியோர்:
யேசு பிரான், திருமூலர், அப்பர்பிரான், நம்மாழ்வார், தமிழ்ச்சித்தர்கள்.

கோவில்கள் சடங்குகள் தேவையில்லை
என வலியுறுத்தியவர்கள் யேசுபிரானும் தமிழ்ச் சித்தர்களும்.

"மக்களே, நீங்கள்தான் கடவுள் வாழும் ஆலயங்கள்!"


"கோவில்கள் திருடரின் குகைகளாகி விட்டன!"

"கவனம், எனது பேரைக்கூறிக்கொண்டு
போலித் தீர்க்கதரிசிகள் மக்களிடம் வருவார்கள்!"

(யேசு பிரான்)

கோயிலாவதேதடா? குளங்களாவதேடா?
கோயிலும் நமக்குளே! குளங்களும் நமக்குளே!

நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம் சாற்றியே
சுற்றி வந்து மொணமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா ?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் ?

சீவன் சிவம் ... ஊனுடம்பு ஆலயம் ...
- - - - - - - - - - - - - - - - - - - -


தெய்வம் உண்டு' என்பதோர் 'சித்தம்' எவருக்கும் ஏற்படலாம் ...
= = = = = = = = = = = = = = = = = = = = = = =
ஆனால் ... 'தெய்வம்' மனிதரிடம் சடங்குகள், பூசாரிகள், கோவில்கள்,
திருவிழாக்கள் எவற்றையும் கேட்கவில்லை !

எண்ணிறந்தோர் பட்டினியில் ...
சிலைகளுக்குப் பால், தயிர், நெய், தேன் அபிஷேகம் ...


கோடிக்கணக்கான ரூபாய்கள்
கோவில்களில் விரயம் ... ? - ? - ? - ? - ?


ஐயோ ... ஐயோ ... மூளை இருந்தும் பயன் இல்லை ...


முக்திநெறி அறியாத மூர்க்கரோடு முயலாது --
பக்தி நெறி வழி நின்று சித்த மலம் அறுப்போமே ...

'சித்தத்தைச் சிவனில் வைத்து'
நித்தம் நற்பணிகள் செய்வோம் ...

சீவன் சிவம் ... ஊனுடம்பு ஆலயம் ...
அன்பே சிவம் ... ஒன்றே குலம் ...

தெய்வம் பிறப்பிலி, உருவிலி, பெயரிலி.
பிரபஞ்ச சக்தியே ... தெய்வம்.
எமக்குள் பிரபஞ்ச சக்தியின் சிறு கூறு உள்ளது.
எனவே எமக்குள் தெய்வம் உண்டு.
- - - - - - - - - - - - - - - - - - -


யேசு பிரான் கூறியுள்ள முக்கிய விடயங்களின் சாரம்சம்
= = = = = = = = = = = = = = = = = = = =
உங்களை நேசியுங்கள் ...
நீங்கள் உங்களை எவ்வாறு நேசிக்கிறீர்களோ,
அவ்வாறே பிறரையும் நேசியுங்கள் ...


கடவுள் எமக்குப் பிதாவானவர் ... நாம் அவருடைய பிள்ளைகள் ...
படாடோபம் எதுவுமின்றி, அமைதியாகக், கடவுளை வணங்கி
எம்மை அவரிடம் முழுமையாக ஒப்புக்கொடுத்து
எம்மை வலுப்படுத்திக்கொள்வோமாக ...


கடவுளை எமது மனத்தினாலும், இதயத்தினாலும்,
ஆன்மாவினாலும் முழுமையாக ஆராதிப்போமாக ...


மக்களே, நீங்கள்தான் கடவுள் வாழும் ஆலயங்கள்!

கோவில்கள் திருடரின் குகைகளாகி விட்டன!

கவனம், எனது பேரைக்கூறிக்கொண்டு
போலித் தீர்க்கதரிசிகள் மக்களிடம் வருவார்கள்!

இயேசு பிரான் கூறியுள்ளவை மாத்திரமே முக்கியம்.
அவர் வாய்க்குள் பிறர் திணித்தவை யாவை, அவரைப் பற்றிய கட்டுக்கதைகள் யாவை என்பதை நாம் இனங்கண்டு அவற்றைப் புறந்தள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக