குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கம் நடத்தும்

கல்லூரி மாணாக்கர்களுக்கான

மாநில அளவிலான போட்டிகள்

நாமக்கல் :
குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கம் நடத்தும் கல்லூரி மாணாக்கர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள் 68- ஆவது குடியரசு நாள் விழாவை முன்னிட்டு நடத்தப்படுகின்றன.
இவற்றில் கவிதை, கட்டுரை, ஓவியம்  முதலான போட்டிகள் நடத்தப்படுகின்றன.
கவிதைப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு ‘இளங்கவி விருது 2017’,
கட்டுரைப் போட்டியில் பங்கேற்பவர்களுக்குச் ‘சிந்தனைச் சிற்பி விருது 2017’,
ஓவியப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு ‘வரைகலைச் சுடரொளி விருது 2017’
ஆகிய விருதுகளும் சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கப்பெறும்.

மொத்தப் பரிசுகளின் மதிப்பு : உரூ 60,000

முதல் பரிசு உரூ. 2000, விருது, சான்றிதழ், கேடயம்
இரண்டாம் பரிசு உரூ. 1,500 விருது, சான்றிதழ், கேடயம்
மூன்றாம் பரிசு : உரூ.1,000 விருது, சான்றிதழ், கேடயம்
நான்காம் பரிசு : உரூ. 500 விருது, சான்றிதழ், கேடயம்
ஐந்தாம் பரிசாக மூன்று போட்டிக்குமாக உரூ. 200 மதிப்புள்ள 225  கேடயங்கள் வழங்கப்பெறும்.
ஒருவரே மூன்று போட்டிகளிலும் பங்கேற்கலாம். ஒவ்வொரு போட்டிக்கும் நுழைவுக் கட்டணம் உரூ.50 ( ஐம்பது உரூபாய் ).
  ஒவ்வொரு படைப்பின் முன்பக்கத்திலும் மாணவர் பெயர், வகுப்பு, கல்லூரி முகவரி, ஒருங்கிணைப்பாளர் பெயர், ஒருங்கிணைப்பாளர் அலைபேசி எண் கண்டிப்பாக எழுதி இணைக்கப்பட வேண்டும்.
  100-க்கும் அதிகமான படைப்புகளை அனுப்பும் கல்லூரி ஒருங்கிணைப்பாளர்களுக்குச் சிறந்த கல்வித் தொண்டிற்கான ஆசிரியர் அப்துல் கலாம் விருது 2017 வழங்கப்பெறும். 200-க்கு மேல் அனுப்பினால் கலைமகள் கவிக்கோவில் விருது வழங்கப்பெறும்.
நடுவர் தீர்ப்பே இறுதியானது.
கவிதைப் போட்டித் தலைப்பு :
அப்துல் கலாம், உரிமை வேண்டும், நட்பு
கட்டுரைப் போட்டித் தலைப்பு :
1 தமிழ் மொழியின் பிறப்பும் சிறப்பும்
2 குடியரசுக்குப் பின் இந்தியா (அ) மாணாக்கர் அரசியலுக்கு வந்தால் ?
3 தற்காலச் சூழலில் பெண்ணுக்குத் தேவை  உரிமையா(சுதந்திரமா)? பாதுகாப்பா ?
ஓவியப் போட்டித் தலைப்பு :
1 ஒலிம்பிக் போட்டிகளில் பரிசு பெற்ற வீரர்களின் உருவங்கள் (அல்லது)
தேசிய விருது பெற்றவர்களின் உருவங்கள்
2 தமிழக  விந்தைகள்(அதிசயங்கள்)  (அல்லது) சமூக விழிப்புணர்வு
3 நான்  இரசித்த இயற்கை (அல்லது ) கோலம் ( புள்ளி,  வண்ணக்கோலம்/இரங்கோலி)
தொடர்புக்கு :
முனைவர் ஆ. கணேசன்
ஒருங்கிணைப்பாளர்
குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கம்
94 காந்திமதி இல்லம்
வடக்குத் தெரு
பரமத்தி வேலூர் ௲ 638 182
நாமக்கல் மாவட்டம்
96981 38000 / 99522 09476 / 96981 39000
தகவல் : முதுவை இதாயத்து
00971 50 51 96 433