செவ்வாய், 27 செப்டம்பர், 2016

திருக்குறளை மொழிபெயர்ப்பு என்பது பெருந்தவறு – ந.சி.கந்தையா


தலைப்பு,திருக்குறள்,மொழிபெயர்ப்பு என்பது தவறு, ந.சி.கந்தையா ; thalaippu_thirukkuralai_mozhiperyarppuenbadhu_thavaruna-si-kandaiah

திருக்குறளை மொழிபெயர்ப்பு என்பது பெருந்தவறு

  சந்திரகுப்தனுக்கு மந்திரியாயிருந்த சாணக்கியர் (கௌடிலியர்) அருத்த சாத்திரம், காம சாத்திரம், தரும சாத்திரம், மோட்ச சாத்திரம், முதலிய பல நூல்களை வடமொழியில் செய்துள்ளார் என்றும் அவர் தமிழ்நாட்டினர் என்றும் அறிகின்றோம். சாணக்கியர் தமிழ்நாட்டில் அறியப்பட்டதும் வடநாட்டில் அறியப்படாததுமாகிய பொருள்களைப் பற்றிய நூல்களை இயற்றினமையால் அந்நூல்கள் வடநாட்டில் மிகவும் புகழ்பெற்று விளங்க ஏதுவாயின. சாணக்கியர் செய்துள்ள நூல்களுக்கு ஆதாரம் தமிழிலேயே இருந்திருத்தல் வேண்டுமென்பது வெளிப்படை. தமிழகத்தில் நூல்வழக்கிலோ செவிவழக்கிலோ உள்ள பொருள்களை ஆதாரமாகக் கொண்டு நூல் இயற்றிய சாணக்கியர், திருவள்ளுவர் என்னும் இருவர் நூல்களிலும் ஓரோரிடங்களில் ஒருமைப் பாடுகாணப்படுதல் இயல்பே. ஆகவே வள்ளுவர் சாணக்கியர் நூலிலிருந்து சிலவற்றை எடுத்துமொழி பெயர்த்துக் கொண்டார் எனக் கூறுதல் இயைபுடையதாகாது.
  விளையாட்டுச் சிறாரால் மணலீற்கீறப்பட்ட கோடுகளிலும், நத்தை ஓட்டிலுள்ள கீறுகளிலும் ஒரோவிடத்து அக்கர வடிவம் காணப்படுவது போல மனு நூலிலுள்ள ஏதோ ஒரு வாக்கியம் திருக்குறளிலுள்ள யாதானுமொரு பொருளோடு ஒற்றுமைப்படுமாயின் முன்னதின் மொழி பெயர்ப்பே பின்னது என்று வாதாடுதல் அபிமானம் பற்றியதாகும்.
na.xi.Kandiah01

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக