தலைப்பு-உயர்நிலை- வள்ளுவர், உலோகநாதன் : thalaippu_valluvar_uyrnilai_loganathan
உயர்நிலை பெறும் வகையினை வள்ளுவர் உணர்த்தியுள்ளார்.
  மனித வாழ்வின் நோக்கமே உயர்தல், உயர்நிலை அடைதல். இவ் இலக்குகள் தனி மனிதனுக்குப் பொருந்துவது போன்றே குழுக்களுக்கும் நிறுவனங்களுக்கும் பொருந்தும். தனிமனித இலக்கு அடையப் பெற்றால் குழுவின் இலக்கோ நிறுவனத்தின் இலக்கோ அடைவது எளிது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் தனிமனித இலக்கினை அடைய முடியும் என்ற எண்ணமே குழு இலக்கு அல்லது நிறுவன இலக்கினை அடையப் போதிய உந்து விசையாக ஊக்கியாகச் செயல்படுகிறது. பொதுவாக, உயர்நிலை பெறும் அல்லது அடையும் வகையினை வள்ளுவர் தனது குறட்பாக்கள் வாயிலாக உணர்த்தியுள்ளார்.
 முனைவர் பெ.(உ)லோகநாதன்:, வாழும் வள்ளுவம் : பக். 8