செவ்வாய், 24 மே, 2016

இந்தியன் குரல் : சட்ட விழிப்புணர்வுப் பயிற்சி முகாம்கள்




இந்தியன் குரல் : சட்ட விழிப்புணர்வுப் பயிற்சி முகாம்கள்

முத்திரை, இந்தியன்குரல் :muthirai_logo_indhiyankural_voice of indian

சமூக ஆர்வலர்களே !
வணக்கம்.
ஒருவர் ஆற்றிலோ கடலிலோ விழுந்தால் காப்பற்ற யாரேனும் வருவார்கள். ஆனால் அவர்களே சாக்கடையில் விழுந்தால் அவர்கள் அண்மையில் இருப்பவனும் நாற்றம் தாங்காமல் ஓடிவிடுவானே ஒழிய காக்க வரமாட்டான். “யாராவது காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்!” என்று கூவிக்கொண்டுதான் இருப்பான்.
 அதுபோலவேதான் நம் மக்கள் நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூவுவதும். அவர்களைக் கொண்டு தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதும் நடக்கிறது
யாராவது அரசியலுக்கு வரவேண்டும் என்பதும் வந்தவர்களை வாழ்த்தி வரவேற்பதும் உங்களைச் சாக்கடையில் தள்ளிவிட்டு நாங்கள் வேண்டியதை பெற்றுக்கொண்டு தப்பி ஓடுகின்றோம் என்று அம்மக்கள் உணர்த்தத்தான்.
 இதையறியாமலோ அறிந்தோ சமூக ஆர்வலர்களும், நன்மக்களும்,  மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் உள்ளவர்களும் தாங்கள்  எங்கே ஓடுகின்றோம் என்று தெரியாமலே ஓடிக்கொண்டு இருக்கின்றார்கள்.
“நமக்கு என்ன தேவை? தீர்வு என்ன?” என்று அறியாமல் எதை நோக்கி நாம் ஓடுகின்றோம் என்று அறியாமல் ஓடுவதால் பயன் இருக்காது.
தீர்வு:
ஒழுக்கமுள்ள மக்களை உருவாக்குவது மட்டுமே இதற்கு தீர்வு
எல்லோருமே ஒழுக்கமுள்ளவர்களே –  அவரவர் தற்தேவை அடிப்படையிலும்  தன்னாதாயத்தின் அடிப்படையிலும்!
அவரவர் தற்தேவையையும்  தன்னாதாயத்தையும் நிறைவேற்றிவிட்டால் அவர்கள்தான் ஒழுக்கமுடைய மனிதர்களாக இருப்பார்கள்
ஒரு மனிதனின்  தற்தேவை என்பது  அவரது “அடிப்படை உரிமை”
ஒரு மனிதனின்  தன்னாதாயம் என்பது அவனது “வாழ்வாதாரம்”
மேற்கண்ட இரண்டையும் ஒரு மனிதன்  தன்மதிப்பை இழக்காமல், அலைந்து திரியாமல் யாருக்கும்  கையூட்டு கொடுக்காமல் பெற முடிந்தால் அவனே ஒழுக்கமுள்ள மனிதனாக வாழ முடியும்
 தகவல் சட்டம் மூலம் ஒவ்வொரு மனிதனும் எளிதாக அடிப்படை உரிமையையும் வாழ்வாதாரத்தையும் பெற முடியும். எப்படி யாருக்கு மனு செய்வது தெரியவில்லையா கவலை வேண்டாம் இந்தியன் குரல் அளிக்கும் பயிற்சியில் கலந்து பயனடையுங்கள்.
“மனிதம் படிப்போம் மனிதர்களைப் படைப்போம்”
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘இந்தியன் குரல்’ ஒவ்வொரு மாவட்டத்திலும் மீண்டும் சிறப்பு முகாம்களையும் விழிப்புணர்வுப் பயிற்சிக் கூட்டங்களையும் நடத்திடத் தொடங்கி உள்ளது.
உங்கள் மாவட்டத்திலும் பயிற்சி நடத்திட தொடர்புகொள்ளவும்
திரு  இராமகிருட்டிணன் (9865577021) தென்மண்டல அமைப்பாளர் 
இந்தியன் குரல் 
பயிற்சி நடைபெறும் இடங்கள் 
சென்னை :  
தகவல் சட்டப் பயிற்சி நடைபெறும் நாள்  :வைகாசி 16, 2047  /29-5-16   பகல் 2.00 மணிக்கு ,
நடைபெறும் இடம் : கும்பத்து வளாகம், முதல் தளம்
 பிரம்பு அங்காடி (rattan bazaar) சென்னை 3
 பூக்கடைக் காவல் நிலையம் எதிரில்
தொடர்புக்கு : 9865577021,9445249202
மதுரை :
பயிற்சி நடைபெறும் நாள் : வைகாசி 15, 2047 28-5-16  அன்று
காலை 10 முதல் மாலை 6 மணிவரையில் 
இடம் :  தெஇதி சிறார் இல்லம் (CSI – CCC Boys Homes)
 பசுமலை பேருந்து நிறுத்தம் அருகில், பசுமலை, மதுரை
தொடர்புக்கு : 8105896001, 9994658672
திண்டுக்கல் மாவட்டம், பழனி :
பயிற்சி நடைபெறும் நாள் : வைகாசி 29, 2047, 11-06-16  காலை 10 மணிக்கு
இடம்: வாசவி பெருமனை (Vasavi mahaal),
தெற்குரத வீதி பழனி
தொடர்புக்கு :  9944815626, 9150712466
நீங்கள் உங்கள் சொந்தங்களுடனும் நட்புகளுடனும் கலந்து பயன்பெற  அன்புடன் அழைக்கின்றோம்.

இந்தியன் குரல் ஆற்றிய பணிகள்:  01-01-2015 வரை:
  16,000 கல்லூரி மாணவர்களுக்குக் கல்விக்கடன், நடவடிக்கை இல்லாமல் கிடந்த இரு நூறாயிரத்து எண்பதினாயிரத்திற்கு (2,80,000) மேற்பட்ட பொதுமக்களின் கோரிக்கைகள் மனுக்கள் தீர்வு காண உதவி .
  தன்மதிப்பை இழக்காமல், அலைந்து திரியாமல், இடைத் தரகர்களை நம்பி ஏமாறாமல், யாருக்கும்  கையூட்டு தராமல், இருந்த இடத்தில் இருந்தே ஒரு மனு மூலம் தீர்வு பெற , எப்படி யாருக்கு எழுதுவது தெரியவில்லையா கவலை வேண்டா!  தமிழகத்தின் முதன்மை நகரங்களில் உள்ள இந்தியன் குரல் இலவச உதவி மையம் வரலாம் மனுக்களை எழுதவும் பயிற்சி பெறவும் இலவசமாக உதவி பெறலாம்.
   நன்கொடை இல்லை! உறுப்பினர்  கட்டணம் இல்லை! பயிற்சி மற்றும் எந்த உதவிக்கும் சேவைக்கும் கட்டணம் வாங்குவதில்லை –  இதுவே கொள்கை!

எசுஎசுடிஏ(SSDA) புத்தக வங்கியின் அருவினை
ஒவ்வொரு பருவத்திலும்  300 இல் இருந்து 400 மாணவர்களுக்கு ஆண்டுக்கு   14 முதல் 18  நூறாயிரம் மதிப்புள்ள புத்தகங்களை வழங்கி வருகின்றோம்.
ஒரு பருவம் முடிந்ததும் அப்புத்தகங்களைத் திரும்ப ஒப்படைத்துவிட்டுப் புதிய பருவத்திற்கான புத்தகங்களைப் பெறும் வகையில் வங்கியாக இது செயல்படும்
 ஒவ்வோர் ஆண்டும் சூன்  மாதம் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
தொடர்புக்கு
  1. எசுஎசுடிஏ(SSDA) புத்தகவங்கி,  திருவொற்றியூர்,  சென்னை.
2.  இலவசச் சட்டக்கல்விமையம்
சட்ட மேதை அம்பேத்கர் சட்டக் கழகம்
கும்பத்து வளாகம்
29, பிரம்புஅங்காடி (Rattan Bazaar)
சென்னை
3. பாலசுப்ரமனியன்
9444305581
– இந்தியன் குரல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக