o.pannerselvam

முத்திரை-தேர்தல்தளம் : muthirai_elections.in முதல்வர் விவரம்-தலைப்பு :tn_cm_headingதேர்தல்தளத்தில் முதல்வர் பன்னீர்செல்வம் : tn_c.m.

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!

  வரும் தேர்தலில்  அஇஅதிமுக வெற்றி பெற்றுத் தமிழக முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் வருவார் என ஆருடம் கூறவில்லை.
  இன்றைக்கும் அவர்தான் முதல்வர் எனத் தேர்தல் தளம்  ஒன்று கூறுகிறது.
  தேர்தல் ஆணையர் அறிவிப்புகளை அறிவதற்காகத் தேர்தல் ஆணையத் தளத்தைப் பார்வையிட முயன்றும் வழக்கம்போல் இயலவில்லை. பல முறை முயன்றாலும் ஒருமுறைதான் தளத்தைப் பார்க்க இயலும்.  தேர்தல் ஆணையத் தளத்தின் நிலை இதுதான். எனவே,  தனியார் தளம் (Elections.in  – India’s 1st Elections website)  ஒன்றில் விவரம் தேடினேன்.
  அதில்,  அனைத்து மாநிலத் தகவல் பகுதியில்  தமிழ்நாட்டில் முதல் அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளதாகக் குறிக்கப்பெற்றுள்ளது.  ஒரு வேளை பழைய தகவலாக இருக்கும்,  எனப் பார்த்தால்,
 மே 23, 2011 –  மே 22, 2016 எனக் காலமும்
குறிக்கப் பெற்றுள்ளது. (இதைத்திருத்துமாறு மின்னஞ்சல் அனுப்பியும் அவ்வஞ்சல் போய்ச்சேரவில்லை.)
 இப்பகுதியில் மட்டுமில்லை. பன்னீர்செல்வம்பற்றிய குறிப்புப்பகுதியிலும் அவர் கடந்த முறை முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியுடன் குறிப்பு முடிகிறது. அதன்படி அவர்தான் இப்பொழூதும் முதல்வர் பொறுப்பில் இருக்கிறார் எனப் பொருள்.
  ஆனால் இவை கண்டு அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை. தமிழ் நாட்டில் ஒவ்வொரு முறை புதிய ஆட்சி அமைந்த பின்னரும் மாவட்ட ஆட்சியகங்களின் தளத்தைப் பார்ப்பேன். மூன்றில் ஒரு மாவட்டங்களிலாவது முந்தைய முதல்வர் பெயரும் படமும் இருக்கும்.  முதல்வருக்கு   நெருக்கமான செய்தித்துறை தகவல்தான் இவ்வாறு இருக்கும்.
  இந்தமுறையும் முந்தைய முறையும் நான்  சுட்டிக்காட்டியபின் திருத்தாமல், முதல்வர்  செயலருக்குத் தெரிவித்தபின்னர் உடன் திருத்தினார்கள். பல அரசின் தகவல்கள்  தவறாக இருக்கின்றன என்பது அவற்றைப் பார்ப்பவர்களுக்குத் தெரியும். சில அமைச்சுத்துறைகளில் தவறான விவரங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டியும் திருத்தவில்லை. தப்போ சரியோ பதிந்தபின் கடமை முடிந்து விடுகின்றது என நினபை்பவர்கள் உள்ளபொழுது என்ன செய்ய இயலும்?
  எனவே, பிற தளங்களில் இவ்வாறு பிழைபாடு இருப்பதில் வியப்பதற்கும் ஒன்றுமி்ல்லை.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்