சான்சன் சான்சன் : johnsonandjohnson_products

சான்சன் & சான்சன் (Johnson & Johnson) நிறுவனப் பொருளால்

புற்றுநோய் தாக்கிப் பெண் உயிரிழப்பு!

உரூ. 493 கோடி இழப்பீடு அளிக்க மிசோரி நீதிமன்றம் தீர்ப்பு!

  அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் வாழ்ந்த சாக்குலின் பாக்சு (Jacqueline Fox) என்ற பெண் 35 ஆண்டுக் காலமாக சான்சன் சான்சன் நிறுவனத்தின் முகமாவு (Talcum powder) முதலான பொருட்களைப் பயன்படுத்தி வந்துள்ளார்.
  அவர் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கருப்பைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டதுடன் கடந்த ஆண்டு அக்தோபர் மாதம் தனது 62ஆவது அகவையில் உயிரையும் இழந்தார்.
  இதையடுத்து சான்சன் சான்சன் நிறுவனத்தினால் உருவாக்கப்படும் பொருட்களில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய வேதிப் பொருட்கள் அடங்கியுள்ளதாக நுகர்வோர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இது குறித்து அந்த நிறுவனம் ஆராயாமல் தனது விற்பனையை உயர்த்துவதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருவதால் ஏமாற்று, சூழ்ச்சி, அக்கறையின்மை ஆகியவற்றின் அடிப்படையில், குறிப்பிட்ட நிறுவனம் புற்றுநோயால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு  உரூ. 493 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என மிசோரி நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.
  மேலும் இது தொடர்பாக சான்சன் சான்சன் நிறுவனத்திற்கு எதிராக மிசோரி மாநில நீதிமன்றத்தில் 1000 வழக்குகளும், புது செர்சி (New Jersey) மாநில நீதிமன்றத்தில் 200 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தரவு:
பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் : peyar_e.bhu.gnanaprakasan