வெலிக்கடை-சிறைவாசிகளும் மனிதர்களே -akara122_welikadai_hungerstrike_g
  
  இலங்கையில், தங்கள் விடுதலையை வலியுறுத்திச் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்ச் சிறைவாசிகளில் ஐவருடைய நிலைமை பாதிப்புக்குள்ளாகி யிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, போராட்டம் நடத்தியவர்களில் மூவர் சிறைப்பிரிவு மருத்துவமனையில் பிப்பிரவரி 25 அன்று சேர்க்கப்பட்டனர். உடல்நிலை பாதிக்கப்பட்டாலும் இசைவான மறுமொழி அரசிடமிருந்து கிடைக்கும் வரை தமது போராட்டம் முன்னெடுக்கப்படும் எனத் தமிழ்ச் சிறைவாசிகளில் தெரிவித்துள்ளனர்.
  கொழும்பு மகசின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல்  சிறைவாசிகள் பதினைந்து பேரும், அநுராதபுரச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் சிறைவாசிகள் இரண்டு பேரும் தங்களை விடுதலை செய்ய வலியுறுத்திச் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை இந்த பிப்பிரவரி 23 அன்று தொடங்கினர். இப்போராட்டம் மூன்றாவது நாளாக பிப்பிரவரி 25 அன்றும் தொடர்ந்தது. இந்நிலையில், வெலிக்கடை மகசின் சிறையில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களில் இரத்திணசிங்கம் தயாபரன், பாலசிங்கம் மனோகரன், சோசப் செபாத்தியன் ஆகிய மூவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு பிப்ரவரி 25 அன்று சிறையிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அதே நேரம், அநுராதபுரம் சிறையில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இருவரும் வாழ்நாள் சிறைவாசிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறைப் பகுதிக்கு மாற்றப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.
  மூன்றாவது நாளாகவும் உண்ணாநிலைப் போராட்டம் தொடர்ந்தும் கைதிகளைப் பார்க்க அரசியலாளர்கள் யாரும் சிறைக்குச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் தமிழ் அரசியல் சிறைவாசிகள் தமது விடுதலையை வலியுறுத்திச் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டங்களை நடத்தியிருந்ததுடன், அரசு வழங்கிய உறுதிமொழிகளை நம்பி அவர்கள் அவற்றைக் கைவிட்டிருந்தனர். இந்த நிலையிலேயே மீண்டும் ஒருமுறை சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப்படுகிறது.
  இதே வேளை, கொழும்புக் குற்றவியல் நீதிமன்றத்தில் பிப்பிரவரி 24 அன்று நேர்நிறுத்தப்பட்ட தமிழ் அரசியல் சிறைவாசிகளில் ஐவர் விடுதலை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தரவு:
பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் - name_peyar-e.bhu.gnanaprakasan