புதன், 20 ஜனவரி, 2016

சப்பான் தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா 2047 / 2016


சப்பான் தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா 2047 / 2016

பொங்கல்விழா.சிறப்புப்பட்டிமன்றம், சப்பான் :azhai_sapanthamizhchangam

அனைவருக்கும் அன்புகலந்த இனிய வணக்கங்கள்!
மார்கழிக்குளிரை வென்று தத்தம்
மனைகளின் முற்றத்தில்
மாக்கோலமதனைத் தீட்டி
பசுஞ்சாணப் பிடியதனில்
பரங்கிப்பூச் சொருகி வைத்து
ஆதவன்தன் வடதிசை பயணத்தை
ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்
காத்திருந்த களைப்பு நீங்க
காளைகளை அடக்கி ஆளும்
தமிழ்க் காளைகளின் வீரம் பொங்க
சீர்கொண்டு வந்திறங்கும்
சுறவமகளை வரவேற்று
வயற்தாயின் வயிற்றில் விளைந்த நெல்மணி முத்துகள் திரட்டி
புத்தரிசிப் பொங்கலிட்டுப்
பொங்கலோ!பொங்கல்!! எனத்
தீந்தமிழ் மாதரும்
தோள்கள் தினவெடுத்த தமிழரும்
குதூகலமாய்க் குடும்பத்துடன்
தொன்றுதொட்டு தரணிதனில்
திகட்டாமல் கொண்டாடி மகிழ
வாய்த்ததொரு நன்னாளாம்!-நம்
தனித்தமிழ்ப் பெருநாளாம்! என்றும்
பொங்கி வரும் புதுநாளாம்!!
பொங்கல் விழாவிற்கு
எனதருமைத் தமிழ்ச்
சொந்தங்களனைவரையும்
சுற்றத்தார் அனைவருடன்
வருக!வருக!! எனப் பேரன்புடன்
வரவேற்று மகிழ்கிறோம்.

இப்பெருவிழா வரும்

மாசி 01, 2047 /பிப்பிரவரித்திங்கள் 13, 2016 ஆம் நாள்

காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறவுள்ளது.

  இவ்விழாவினைச் சிறப்பிக்க தாய்த்தமிழகத்திலிருந்து முனைவர் கு.ஞானசம்பந்தம் கலந்துகொள்ளவிருக்கின்றார்கள்.

  விழாவின் முற்பகுதியில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் பிற்பகுதியில் உங்கள் மனங்கவர்ந்த பேச்சாளர்கள் பங்குபெறும் பொங்கல் சிறப்புப் பட்டிமன்றமும்இடம்பெறவிருக்கின்றன.
  இவ்விழாவின் மூலம் வரும் பயன்களனைத்தும் தனித்தமிழ் இயக்கத்தின் அடியொற்றி நடந்து தமிழ்த்தாயின் ஆட்சி நம் தமிழர்தம் இல்லமெல்லாம் பரவிடும் வகையில் அன்னைத்தமிழின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இடம்:- சகுரா அரங்கம், இகாசி ஓசிமா தோக்கியோ.

அரங்கம் இகாசி ஓசிமா தொடர்வண்டி நிலையத்தினின்று 10 நிமிட நடைத்   தொலைவில் உள்ளது.
இசைவுச்சீட்டுக்கு அழைப்பிதழில் கொடுக்கப்பட்டுள்ள அன்பர்களையும், இப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள அன்பர்களையும் தொடர்பு கொள்ளும்படிப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தோக்கியோ பகுதி:
நிசிகசாய், சேய்சின்சோ:
வாணிசங்கர்: 080 9539 0768(Docomo)
பிரசன்னா: 080 2024 4045 (Docomo)
ஓசிமா:
துரை 090 9681 1477 (AU)
தோக்காச்சிபா:
வினோத்து.இராசு 080 4407 4892 (AU)
இயோக்கோஅமா:-
இராசாராம் 080 3584 7700 (AU)
செந்தமிழ் 080 4365 0206 (Soft Bank)
உட்சுனோமியா:-
வேலுபிரபாகரன் 080 2247 9267 (Docomo)
பாலமுருகன் 090 9922 4694 (SoftBank)
கவாசாகி:-
தேசிங்கு. 080 84390567 (AU)
சுருமி:-
பழனி 080 3347 4656 (AU)
சதீசுகுமார் 080 4138 1682 (AU)
இங்ஙனம்,
கலை – பண்பாட்டுத்துறை
சப்பான் தமிழ்ச்சங்கம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக