ThamizhArchagarKatturaiPotti



என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,

தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” – திருமூலர்

Muthirai_logo_thamizhkkaappukazhagam

தமிழ்க்காப்புக் கழகத்தின்

தமிழ்ப்பூசை – தமிழ்ப்பூசாரி கட்டுரைப்போட்டி

மொத்தப்பரிசு உரூ.10,000 /-


இறையன்பர்களுக்கும் பிற தமிழன்பர்களுக்கும்
வணக்கம்.
தமிழ்க்காப்புக்கழகத்தின் சார்பில்
நமக்குத் தேவை தமிழ்ப்பூசைகளும் தமிழ்ப்பூசாரிகளும்
என்னும் தலைப்பில் கட்டுரைப் போட்டி நடைபெற உள்ளது.
போட்டிக்கான பரிசுகளாக
முதல் பரிசு உரூ. ஐந்தாயிரம் (5,000/-)
 இரண்டாம் பரிசு உரூ. மூவாயிரம் (3,000/-)
 மூன்றாம் பரிசு உரூ. இரண்டாயிரம் (2,000/-)
வழங்கப்பெறும்.
பரிசுத்தொகைகளை இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பில்
மாம்பலம்  ஆ.சந்திரசேகர் : mambalam_chanthirasekar
வள்ளல் மாம்பலம் ஆ.சந்திரசேகர்  வழங்குகிறார்.
கட்டுரைப் போட்டிக்கான விதிமுறைகள் வருமாறு:
  1. அகவை, படிப்பு, பணி, நாடு முதலான எவ்வேறுபாடுமின்றி அனைவருக்கம் பொதுவானது. எனவே, மாணாக்கர், மாணாக்கர் அல்லாதார், இளைஞர், முதியோர், நம் நாட்டவர் அயல்நாட்டவர் என அனைவரும் பங்கேற்கலாம்.
  2. பங்கேற்பாளர் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பெறும்.
  3. கட்டுரைகள் அகரமுதல (www.akaramuthala.in )மின்னிதழில் வெளியிடப்பெறும்.
  1. கட்டுரையாளர்கள் யாரையும் அல்லது எவ்வமைப்பையும் தாக்குதல் தாங்குதலின்றி நடுவுநிலைமையுடனும் கருத்துச் செறிவுடனும் எழுதி அனுப்ப வேண்டும்.
  1. தமிழ்ப்பூசைகள்/ தமிழ் வழிபாடுகள் அதற்றப்பட்ட, அகற்றப்படும் சூழல்கள், தமிழ்ப்பூசாரிகள் / தமிழ் அருச்சகர்கள் ஒதுக்கப்பட்ட, ஒதுக்கப்படும் சூழல்கள் முதலியவற்றைக் குறிப்பிட வேண்டும்.
 6. யாவரும் அருச்சகராக அமர்த்தப்படலாம் என்பது குறித்த அண்மைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பினையும் நடுவுநிலைமையுடன் ஆராய்ந்து எழுதுவது சிறப்பாகும்.[ http://supremecourtofindia.nic.in/FileServer/2015-12-16_1450255713.pdf ] 54 பக்கம் உள்ள தீர்ப்பின்படி தேவையெனில் கட்டுரையாளர்கள், மின்னஞ்சலில் தொடர்பு கொண்டால் அனுப்பி வைக்கப்பெறும்.
  1. தமிழ்நாட்டில் ஆகமம் என்றால் தமிழ் ஆகமங்களைத்தானே குறிக்க வேண்டும், அவை என்ன கூறுகின்றன என்பனபற்றியெல்லாம் உரிய மேற்கோள் குறிப்புகளுடன் ஆராய்ந்து தெரிவிப்பது மேலும் சிறப்புடையதாகும்.
  1. பிழையின்றியும் அயற்சொற்கள் கலப்பின்றியும் எழுதுவது கட்டுரைக்குத் தகுதியைச் சேர்க்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
  1. கட்டுரைகளுக்குப் பக்க வரம்பு இல்லை.
  2. கட்டுரைகளை ஒருங்குகுறி (யூனிகோடு) எழுத்துருவில் கணியச்சிட்டு 3 படிகளில் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
தமிழ்ப்பூசை-தமிழ்ப்பூசாரி கட்டுரைப்போட்டி
தமிழ்க்காப்புக்கழகம்,
23எச்., ஓட்டேரிச்சாலை, புழுதிவாக்கம்
சென்னை 600 091
  1. கட்டுரையையும் கட்டுரையாளர் பற்றிய குறிப்புகளையும் கட்டுரையாளரின் ஒளிப்படத்தையும் பின் வரும் மின்வரிக்கு அனுப்ப வேண்டும்.
கட்டுரை வந்து சேருவதற்கான இறுதி நாள் : மார்கழி 28, 2046 / சனவரி 13, 2016
  1. நடுவர் குழுவின் முடிவிற்கிணங்கப் பரிசிற்குரிய படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும்.
அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
தலைவர், தமிழ்க்காப்புக்கழகம்
பேசி: 9884481652