செவ்வாய், 3 நவம்பர், 2015

தொல்காப்பியர் காலத் தமிழ், வளம் பெற்றிருந்தது – முனைவர் சி.இலக்குவனார்

tholkappiya aaraaychi  mun attai
  தமிழ் அவ்வாறு தொல்காப்பியர் காலத்தில் விளங்கியது.  தொல்காப்பியர் காலத்துத் தமிழ் மிகவும் வளம்பெற்று  இருந்தது.  அதனை நன்கு எடுத்துக் காட்டுகின்றது தொல்காப்பியம்.
  தொல்காப்பியத்தால் மொழி நிலை –  இலக்கியநிலை மட்டுமன்று; அக்கால மக்கள் நிலையும் அறியலாகும்.
  இவ்வாராய்ச்சி நூல் தொல்காப்பியர் கால மொழியின் சிறப்பையும் இலக்கியவளச் சிறப்பையும் எடுத்துக்காட்டும்.  தொல்காப்பியர் கால மக்கள் வாழ்வு பற்றித் தனியாக ஒரு நூலில் ஆராய எண்ணியுள்ளோம்.
  தமிழ் மக்கள் வரலாறு அறிவதற்குத் தமிழ் மொழியும் இலக்கியமும் பெருந்துணையாக உள்ளன.  பண்டைத் தமிழ் மக்கள் வரலாற்றை அறிவதற்கு இவையன்றிப் பிற சான்றுகளை நாம் பெற்றோம் இல்லை.  எனவே தமிழக வரலாற்றின் முதற்பகுதியே இந்நூல் எனக்கொள்ளுதல் தகும்.
தொல்காப்பிய அறிஞர் முனைவர் சி.இலக்குவனார்
தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம் 285


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக