செவ்வாய், 9 ஜூன், 2015

நாட்டிய நங்கையர் அறிவதற்கெனச் சிறந்து விளங்கிய கலைகளில் சில


கீருத்திகா இரவிச்சந்திரன்
கீருத்திகா இரவிச்சந்திரன்
வேத்தியல், பொதுவியல் என்றிரு திறத்துக்
கூத்தும், பாராட்டும், தூக்கும், துணிவும்,
பண்ணியழ்க் கரணமும், பாடைப் பாடலும்,
தண்ணுமைக் கருவியும், தாழ்தீங் குழலும்,
கந்துக் கருத்தும்,மடைநூற் செய்தியும்,
சுந்தரச் சுண்ணமும், தூநீ ராடலும்
பாயற் பள்ளியும், பருவத்து ஒழுக்கமும்,
காயக் கரணமும், கண்ணியது உணர்தலும்
கட்டுரை வகையும், கரந்துறை கணக்கும்,
வட்டிகைச் செய்தியும், மலராய்ந்து தொடுத்தலும்,
கோலம் கோடலும், கோவையின் கோப்பும்
காலக் கணிதமும், கலைகளின் துணிவும்,
நாடக மகளிர்க்கு நன்கனம்
வகுத்த ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கையும்
கற்றுத் துறைபோகிய பொற்றொடி நங்கை
– சீத்தலைச் சாத்தனார்: மணிமேகலை: 2:1832
(பாடைப்பாடல்-அகநாடகம், புறநாடகம் என்பவற்றிற்குரிய உருக்கள்: கந்துகக் கருவி-பந்தாடும் தொழில்: காயக் கரணம்-64 வகைக் கரணங்கள்; மடைநூற் செய்தி-சமையற்கலை; கரந்துறை கணக்கு-மறைந்து வாழும் கலை; கோலம் கோடல்-ஒப்பனைக் கலை; கோவையின் கோப்பு – முத்து முதலியவற்றை மாலையாகக் கோத்தல்; வட்டிகைச் செய்தி-தூரிகை வரைகலை;)
manimegalai_attai01
 அகரமுதல 82, வைகாசி 24, 2046 / சூன் 07, 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக