52thamizh

உலகப் பொதுமொழியாய் முன்பு இருந்ததும்

நாளை இருக்கப் போவதும் தமிழே


  பண்டு முதிரா நாகரிகமுடைய மிக முற்பட்ட காலத்தில் தமிழ் உலகப் பொதுமொழியாயிருத்தல் வேண்டுமென்று அறிஞர் பலர் உய்த்துக் காண்கின்றனர். அது எப்படியாயினும், வருங்கால உலகப் பொதுமொழியாவதற்குரிய பண்பு அதற்குக் கட்டாயம் உண்டு என்பதில் ஐயமில்லை. வேறு எம்மொழிக்கும் ஆங்கிலம், சீனம், இந்துத்தானி ஆகியவற்றுக்கு இருக்கும் உயர்ப்பண்பைவிட, அதற்குரிய உயர்ப்பண்பின் தகுதி பெரிதாகும். உயர்தனிச் செம்மொழிகள் கடந்த, தாய்மொழிகள் கடந்த இவ்வுயிர்ப்பண்புக்குக் காரணமென்ன? அதுவே தமிழ் வளர்த்துக் கொண்டுள்ள தனித்தமிழ் பண்பு ஆகும்.
– பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையார்
kaa.appathurai01