வெள்ளி, 1 மே, 2015

இனி முழுக்க முழுக்க, மான மீட்புப்பரப்புரைகளே! வீரமணி சூளுரை

page05-08.pmd
  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 125ஆம் ஆண்டு பிறந்த நாள்விழாவும் சமக்கிருத ஆதிக்க எதிர்ப்புக்கருத்தரங்கமும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், இரண்டாம் நாளாகச் சித்திரை 13, 2046 / 26.4.2015 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
 முதல் நாள் நிகழ்வில் கருத்தரங்குடன், கலை நிகழ்ச்சியாக புரட்சிக் கவிஞர் பாடல் களுடன் குயில்மொழி குழுவினரின் நடனம் பார்வையாளர்களின் கருத்துகளைக் கவர்ந்தன.
  இரண்டாம் நாள் நிகழ்வாக வாழ்வியல் பண்பாட்டு மீட்டுருவாக்கக் கருத்தரங்கம் நடைபெற்றது. முனைவர் அ.இராமசாமி தலைமையில் புதுவை மாநிலப் பகுத்தறிவாளர்கழகத் துணைத்தலைவர் மு.ந. நடராசன் வரவேற்றார். எழுத்தாளர் வே.மதிமாறன் தொடக்க உரையாற்றினார்.
 மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் படத்தை திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு திறந்து வைத்து உரையாற்றினார். சிற்றிதழ்கள் குறித்து இதழாளர் சுகுணா திவாகர், கல்வெட்டு குறித்து பத்மாவதி, நாடகம் குறித்து இதழாளர் கவின்மலர் உரையாற்றினார்கள்.
 விபுலானந்த அடிகள் படத்தைத் திறந்துவைத்து மு.பி.பாலசுப்பிரமணியம் உரையாற்றினார்.
 இரண்டாம் அமர்வில் பேராசிரியர் காஞ்சி கதிரவன், வாழ்வியலில் குடும்ப சடங்குகள் குறித்தம் முனைவர் பத்மாவதி விவேகானந்தன் வாழ் வியலில் பெண்ணியம்குறித்தும் பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையார் படத்தைத் திறந்துவைத்து எழுத்தாளர் முகம் மாமணியும் உரையாற்றினர்.
 அறிவியல் தலைப்பிலான அரங்கில் மருத்துவர் சிவராமன் உணவு குறித்தும் ஒரியா பாலு, கடல்சார் அறிவியல் குறித்தும் முனைவர் இர.வாசுதேவன், மருத்துவம் குறித்தும் சூழலியலாளர் கோ.சுந்தரராசன் சூழலியல் குறித்தும் பேசினர்.
பேராசிரியர் சி.இலக்குவனார் படத்தைத் திறந்து வைத்து எழுத்தாளர் மஞ்சை வசந்தன் உரையாற்றினார்.
 கவிஞர் ஈரோடு தமிழன்பன் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பொதுவுடைமைக் கொள்கை ‘திசையெட்டும் சேர்ப்போம்’ என்கிற தலைப்பில் கவிஞர் புரட்சிக் கனல், ‘இது எனது எனுமோர்க் கொடுமையைத் தவிர்ப்போம்’ என்கிற தலைப்பில் கவிஞர் தமிழமுதன், ‘இதய மெலாம் அன்பு நதியினில் நனைப்போம்’ என்கிற தலைப்பில் கவிஞர் சொற்கோ ஆகியோர் புரட்சிக் கவிஞரின் கவிதைகளை எடுத்துக்காட்டிக் கவிதை பாடினார்கள். விழாவின் முடிவில் பொது அரங்கம் நடைபெற்றது.
  வழக்குரைஞர் சு.குமாரதேவன் வரவேற்றார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை உரை ஆற்றினார். வழக்குரைஞர் அருள்மொழி உரையைத் தொடர்ந்து திராவிட தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரை ஆற்றினார்.
 ஆசிரியர் கி.வீரமணி நிறைவுரை
 ஆசிரியர் கி.வீரமணி குறிப்பிடும்பொழுது, நம்முடைய இன எதிரிகள் இந்த நாட்டில் மீண்டும் மதவாத ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்று சொல்லி, அதற்காக மிகப்பெரிய அத்திரங் களையெல்லாம் ஏவிவிட்டு, சமக்கிருத ஆதிக்கததை நிலைநாட்ட முயல்கின்றனர். நம்முடைய இன எதிரிகள் சமக்கிருத மயமாக்கும் பண்பாடு (Sanskritic Culture) என்கிற தொடரைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
 எந்தப் பெயரைச் சொன்னாலும் சமக்கிருத ஆதிக்கம்தான். எந்த ஆதிக்கத்தையும், எந்தக்குடிமகனும் ஏற்றக் கொள்ள முடியாது இந்தக் காலக்கட்டத்திலே. ஒருவருடைய கருத்து என்பது வேறு, ஆதிக்கம் செலுத்துவது என்பது வேறு.   பிராமண ஆதிக்க எதிர்ப்பு மாநாடுகளை நாம் நடத்தினோம்.
 இந்தப் பணி என்பது எப்போதும் தேவைப்படும் பணி. எப்படி வேளாண்மையை விட முடியாதோ, எப்படி மூச்சை அடக்க முடியாதோ அதுபோலத்தான் இந்த மானம் மீட்கும் பணி, நம்முடைய இயக்கம் மானத்தை மீட்கும் இயக்கம். எனவே, என்ன விலை கொடுக்கவும் அதற்கு நாங்கள் தயார், நாங்கள் தயார் என்கிற அறிவிப்பைத்தான் மீண்டும் மீண்டும் சொல்லுகிறோம். அடிக்க அடிக்க பந்து எழும்பும், நீ எதிர்க்க எதிர்க்க எங்கள் இயக்கம் மேலே போகும்.
 யாரை ஆதரிப்பது, எதிர்ப்பது என்பது தேர்தல் வரும்போதுதான் முடிவு செய்து கொள்ளவேண்டிய செய்தி. இதற்கு நடுவிலே அரசியல் பரப்புரைக்கு எல்லாம் நாங்கள் ஆளாகுவதாக இல்லை. இனிமேல் முழுக்க முழுக்க சமுதாயப் பரப்புரைதான், முழுக்க முழுக்க மூடநம் பிக்கைகள் ஒழிப்புப் பரப்புரைதான், முழுக்க முழுக்க கடவுள் ஒழிப்புப் பரப்புரைதான்.
 முழுக்க முழுக்க மத ஒழிப்புப் பரப்புரைதான், முழுக்க முழுக்க இந்த நாட்டில் மான மீட்புப் பரப்புரைதான் அதை இங்கே நான் அறிவிக்கிறேன் என்று பார்வையாளர்களின் பலத்த கரவொலிகளுக்கிடையே   ஆசிரியர் வீரமணி குறிப்பிட்டார்.
 மாநில மாணவரணிச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார். பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் சத்திய நாராயணசிங்கு நன்றி கூறினார்.
 பங்கேற்றவர்கள்
 திராவிடர் கழகப்பொதுச்செயலாளர் தஞ்சை செயக்குமார், கலை அறப்பேரவை மு.கலைவாணன், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருட்டிணன், துணைச்செயலாளர் சேரன், சுய மரியாதை திருமண நிலைய இயக்குநர் திருமகள், பேராசிரியர் ப.காளிமுத்து, வட மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், சிந்தாதிரிப் பேட்டை பாலகிருட்டிணன்,  தூத்துக்குடி பெரியார டியான், பேராசிரியர் ராசதுரை, பேராசிரியர் இசை யமுது, மருத்துவர் தேனருவி, செந்துறை இராசேந் திரன், மயிலை சேதுராமன், பொறியாளர் குமார், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்டச் செயலாளர் செ. இர.பார்த்சாரதி, வட சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் தி.வே.சு. திருவள்ளுவன், மகளிரணி சுமதி, கொடுங்கையூர் தங்க.தனலட்சுமி, தங்கமணி,  கணேசன், இளைஞரணித் தலைவர் அன்புச்செல்வன், வேலூர் மண்டலச் செயலாளர் பஞ்சாட்சரம், போளூர் பகுத்தறிவாளர் கழகம் பன்னீர்செல்வம், வழக்குரைஞர்கள் வீரமர்த்தினி, ந.விவேகானந்தன், தெ.சென்னியப்பன், வீ.தெ.அருள் மொழி, இளைஞரணி பாலமுருகன், அரும்பாக்கம் சா.தாமோதரன், தமிழ்ச்செல்வன், பெரியார் பிஞ்சுகள் கவிமலர், இலக்கியா, செம்மொழி முதலான ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
page05-08.pmd page05-08.pmd DSC07737
- சிறப்புச் செய்தியாளர், விடுதலை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக