புதன், 4 மார்ச், 2015

கெ.கல்லுப்பட்டியில் கிடைத்த கோபுரக் கலசம்

68kalasam01

கெ.கல்லுப்பட்டியில்

‘100 நாள்’ வேலை பார்க்கும் போது கிடைத்த

கோபுரக் கலசம்

  தேவதானப்பட்டி அருகே உள்ள கெ.கல்லுப்பட்டியில் 100 நாள் வேலைத் திட்டம் நடைபெற்று வருகிறது. அவ்வாறு வேலை செய்யும்போது சிவப்புத்துணி சுற்றிய நிலையில் கோபுரக் கலசம் இருப்பதை அப்பகுதி மக்கள் எடுத்தனர்.
 கெ.கல்லுப்பட்டி பகுதி, வரலாறும் பரம்பரைச்சிறப்பும் மிகுந்த பகுதியாகும். பண்டைய காலத்தில் திப்பு சுல்தான், ஊமைத்துரை, இராணிமங்கம்மாள் ஆகியோர் ஆங்கிலேயர் ஆட்சியில் தலைமறைவாக இருந்த இடங்களும் அதனால் பல வரலாற்றுச்சுவடுகளும் உள்ளன.
  மேலும் இப்பகுதியில் பலவருடங்களுக்கு முன்னர்ப் பிளக்கப்பட்ட மரத்தில் தங்கக் காசுகள், தங்கக் கட்டிகள் போன்றவற்றை இப்பகுதி மக்கள் எடுத்து பயன்படுத்தியுள்ளனர். இராணிமங்கம்மாள் காலத்தில் அமைக்கப்பட்ட சாலைகள், ஊமைத்துரை மறைந்திருந்த இடங்கள் இப்பொழுது சிதைந்த நிலையில் உள்ளன.
  மேலும் கெ.கல்லுப்பட்டியில் சித்தமல்லன் என்ற குறுநில மன்னன் ஆட்சிபுரிந்தபோது பல படையெடுப்புகள் நிகழ்ந்துள்ளன.
  இந்நிலையில் தற்பொழுது கோபுரத்தின் கலசம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேறு எங்காவது கோயிலில் கொள்ளையடித்து மறைத்து வைக்கப்பட்டதா அல்லது உறுதிமம்(Iridium) உள்ளது என எடுத்து உறுதிமம்(Iridium) இல்லாததால் கோபுரக்கலசத்தை ஒளித்துவைத்துவிட்டாரகளா என்ற ஐயமும் இப்பகுதியில் எழுந்துள்ளது. மேலும் ஈர்ப்பு சக்தியாகவும், இடிகளைத் தாங்கக்கூடிய வகையிலும் நவதானியங்களை வைத்துக் கோபுரக் கலசங்கள் அமைக்கப்படும். அவ்வாறு வைக்கப்பட்ட தானியங்கள் எதுவும் இல்லை. எனவே தொல்லியல்துறை அதிகாரிகள் இக்கலசத்தைப் பார்வையிட்டு உண்மையான வரலாற்றுச் செய்தியைப் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
68vaigaianeesu




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக