செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

திருவரங்கம்: அ.தி.மு.க.விற்கு ஆதரவு – ஓய்வு ஆசிரியர் சங்கங்கள் முடிவு

thiruvarangam-valarmathi02

திருவரங்கம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில்

அ.தி.மு.க.விற்கு ஆதரவு

ஓய்வு ஆசிரியர் சங்கங்கள் முடிவு

  திருச்சியில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கு ஓய்வுஆசிரியர் சங்கங்கள் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர். பள்ளி கல்வித்துறையில் மடிகணிணி முதற்கொண்ட 14 வகை சலுகைகளை ஏழை, எளிய மாணவர்களுக்கு வழங்கிய அதிமுக அரசிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டது. திருச்சியில் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிப் பணி ஓய்வு இடைநிலை மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நல்லாசிரியர் ஏ.சி.சிவபாலு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலத்;தலைவர் திருமலைச்சாமி, மாநிலப் பொதுச்செயலாளர் ஆர்.மாணிக்கம், ஈங்கூர் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை உயர் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இடைநிலை சிறப்பாசிரியர்களுக்கும் வழங்க அதிமுக ஆட்சிதான் அரசாணைகள் வெளியிட்டு நிறைவேற்றியது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடைபெற உள்ள திருவரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக விற்கு ஆதரவு அளிப்பது என்றும்
  அதற்காக ஆசிரியர்கள் சங்கத்தின மண்டலத் தலைவர்கள் ஒவ்வோர் ஊராகச் சென்று வாக்கு சேகரித்து ஆசிரியர்களிடம் அதிமுக அரசின் சாதனைகளைப்பற்றி விளக்கி கூறுவது என்றும், கருவூலங்கள் மற்றும் கல்வி அலுவலகங்களில் தற்போது நடைமுறையில் உள்ள கையூட்டு வாங்கும் போக்கைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற அரசு ஆசிரியர் குழு அமைக்கவேண்டும் எனவும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் திருச்சி மண்டலத் தலைவர் வி.என்.எசு. இரெங்கசாமி, திருச்சிமாவட்டத்தலைவர் சிதம்பரம், திருச்சி மாhவட்டச்செயலாளர் வி.பாலகிருட்டிணன், கோவை மண்டலத் தலைவர் எ.சுந்தரம் முதலான பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தென்மண்டலத் தலைவர் கம்பம் க.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக