56anna_speakson_Ilakkuvanar

இலக்குவனார்க்கு வழங்கப்பெற்ற பட்டங்களும்

அடைமொழிகளும்

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்க்கு நகர்தோறும் தமிழ் அமைப்புகள் பட்டங்கள் வழங்கியுள்ளன. சிறப்பு அடைமொழி குறித்தும் இலக்குவனாரை அழைத்துள்ளனர். நூற்றுக்கணக்கில் உள்ள இவற்றுள் சிலவற்றைக் காண்போம்! இவையே பேராசிரியரின் அரும் பணிகளையும் ஆழ்ந்த புலமையையும் தமிழ் காக்கும் போர்க் குணத்தையும் மக்களால் போற்றப்பட்ட சிறப்பையும் நமக்கு உணர்த்தும்.
56Ilakkuvanar_malaysiya
  1. அளப்பரிய தொண்டாற்றிய பெருமகனார்
  2. ஆற்றல் களஞ்சியம்
  3. இதழியல் செம்மல்
  4. இந்தி எதிர்ப்புப் படைத்தளபதி
  5. இந்தி எதிர்ப்புப் போருக்கு மூலவர்
  6. இருபதாம் நூற்றாண்டு இளங்கோ அடிகள்
  7. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர்
  8. இருபதாம் நூற்றாண்டுத் திருவள்ளுவர்
  9. இருபதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியர்
  10. இலக்கணச் செம்மல்
  11. இலக்கணப் புலமையும் இலக்கியப் புலமையும் மிக்கவர்
  12. உத்தமர்
  13. உயர் பண்பாளர்
  14. உழைப்பால் உயர்ந்தவர்
  15. எதிர்நீச்சலில் எரிகதிர் நித்திலம்
  16. எழுத்துலகின் இளங்கோ
  17. எளியநடையும் புதிய நோக்கும் கொண்ட படைப்பாளர்
  18. கிளர்ச்சியாளர்
  19. குறள்நெறி பரப்பும் கொள்கைவீரர்
  20. குறள்நெறிக் காவலர்
  21. குறள்நெறிச் செம்மல்
  22. கூண்டிலே அடைக்க முடியாத சிங்கம்
  23. சங்கத்தமிழ் வளர்த்த சான்றோர்
  24. சிறைசென்ற செம்மல்
  25. சிறையே தவம் செய்த சீமான்
  26. செந்தமிழ் நலம் பேணும் செல்வர்
  27. செந்தமிழ்ச் செம்மல்
  28. செந்தமிழ்ப் படையின் மானச்செம்மல்
  29. செந்தமிழ்மாமணி
  30. செம்மொழிச்சுடர்
  31. தமிழ் இயக்கத்தின் ஆணிவேர்
  32. தமிழ் எழுச்சியின் உருவம்
  33. தமிழ் காத்த தானைத் தலைவர்
  34. தமிழ் ஞாயிறு
  35. தமிழ் மொழியின் தனிச்செல்வர்
  36. தமிழ் வாழ்விற்காக வாழ்ந்தவர்
  37. தமிழ்க் கொண்டல்
  38. தமிழ்க்காப்பினை இலக்காகக் கொண்டவர்
  39. தமிழ்க்காப்புத் தலைவர்
  40. தமிழ்க்குரவர்
  41. தமிழ்க்கென வாழ்ந்து தமிழாய்ச் சிறந்தவர்
  42. தமிழ்காக்கச் சிறை சென்றவர்
  43. தமிழ்த்தாய்
  44. தமிழ்த்தாயின் தவப்புதல்வன்
  45. தமிழ்ப்போராளி
  46. தமிழர் தளபதி
  47. தமிழர்மாண்பு பேணும் மாண்பினர்
  48. தமிழாக்கத் தொண்டினர்
  49. தமிழியக்கம்
  50. தமிழுக்காக உழைத்தவர்
  51. தமிழுக்காக வாழ்ந்து தமிழாய் வாழ்ந்தவர்
  52. தமிழுக்காகத் தன் வாழ்வைப் பணயம் வைத்த அஞ்சா நெஞ்சர்
  53. தமிழுக்கும் தமிழர்க்கும் பாடுபட்டவர்
  54. தமிழுலகு போற்றும் தலைவர்
  55. தமிழே மூச்சென உயிர்த்து வாழ்ந்தவர்
  56. தமிழை நினைந்து தம்மை மறந்தவர்
  57. தலைமைத் தலைவர்
  58. தன்மானப் பெரும் புலவர்
  59. தனித்தமிழ்க்காவலர்
  60. திராவிட இயக்க வெற்றிகளுக்கு வித்திட்டவர்
  61. தொல்காப்பியச்செல்வர்
  62. தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் இரு கண்களாகக் கண்டவர்
  63. தொல்காப்பியப் பேரறிஞர்
  64. பண்பாட்டின் காவலர்
  65. பயிற்சிமொழிக்காவலர்
  66. பழமைக்கும் மறுமலர்ச்சிக்கும் பாலமாய் இருந்தவர்
  67. பழுத்த தமிழ்ப் புலமை வாய்ந்தவர்
  68. புதுமைப் பார்வை கொண்டவர்
  69. புரட்சிக் கவிஞரின் தமிழ் இயக்கத் திற்குச் செயல் வடிவம் கொடுத்தவர்
  70. புரட்சிப் பேராசிரியர்
  71. புரட்சியாளர்
  72. புலவர்சீர் பரவுவார்
  73. பைந்தமிழ் வளர்த்த ஐந்தமிழ்ப் புலவர்
  74. பைந்தமிழ்த்தாய் ஈன்றெடுத்த பாவலன்
  75. பைந்தமிழ்ப்பாவலர்
  76. போர்க்குணம் கொண்டோர்களின் வழிகாட்டி
  77. போர்க்குணம்கொண்டவர்
  78. போராளி
  79. மன்பதைக்கு எடுத்துக்காட்டானவர்
  80. முத்தமிழ்க்காவலர்
  81. முத்தமிழ்ப் போர்வாள்
  82. முத்திரை பதித்த இதழாளர்
  83. முதுபெரும் புலவர்
  84. மொழிக்காக வாழ்வை ஈந்த புரட்சிப் புயல்
  85. மொழிபெயர்ப்பு ஏந்தல்
  86. மொழியியல் அறிஞர்
  87. வீரத் தமிழ்த் திருமகன்