53fever01

தேனிமாவட்டத்தில் பரவி வரும் மருமக்காய்ச்சலால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி முதலான ஊர்களில் மருமக்காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. சிறிய குழந்தைகள் முதல் பெரியவர் வரை இக்காய்ச்சலுக்கு ஆளாகின்றனர். இக்காய்ச்சல் வந்தவுடன் கண்களில் இருந்து நீர் வருதல், கை, கால்கள் சோர்வடைதல், உணவு உண்ணாமை போன்ற உடற்கேடுகள் ஏற்படுகின்றன. மேலும் இக்காய்ச்சல் ஏறத்தாழ 10 நாள்வரை நோய்தாக்கியவர்களைத் தாக்குகிறது. மேலும் தொடர்ச்சியாக இருமல் வருவதால் அண்மையில் உள்ளவர்களுக்கும் இந்தத் தொற்றுநோய் பரவுகிறது.
தேவதானப்பட்டி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லாததால் இயல்பாக வருகின்ற காய்ச்சலுக்குத் தரும் மருந்தையே கொடுக்கின்றனர் எனப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பலர் பெரியகுளம், வத்தலக்குண்டு போன்ற வெளியூர்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளை நாடிச்செல்கின்றனர். இக்காய்ச்சலைப் பயன்படுத்திப் போலி மருத்துவர்கள் அதிகமாகப் பெருகியுள்ளனர்.
எனவே மாவட்ட நிருவாகம் போர்க்கால அடிப்படையில் மருமக்காய்ச்சலைத் தடுத்து நிறுத்திடவேண்டும் என்றும் போலி மருத்துவர்களைக் கண்காணிக்கவேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

53vaikaianeesu