tomotto01
  தேவதானப்பட்டி பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால்   உழவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
 தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, குள்ளப்புரம் பகுதிகளில் பல காணி(ஏக்கர்) பரப்பளவில் தக்காளிப் பயிரிடல் நடைபெற்று வருகிறது.
   இப்பகுதியில் விளையும் தக்காளிகள் சென்னை, பெங்களுர், வத்தலக்குண்டு, ஆண்டிப்பட்டி சந்தை உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
  கடந்த சில வருடங்களாகப் போதிய மழை இல்லாததால் நெல், கரும்பு, வாழை போன்ற பயிரிடலை விட்டு விட்டுக் குறுகிய காலப்பயிர்களான தக்காளி, கத்திரிக்காய் போன்றவற்றைப் பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வரை தக்காளி   அயிரைக்கல்(கிலோ) உரூ.50 வரை விற்பனை ஆனது. இதனால் உழவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆயுதபூசை, ஈகைததிருநாள் (பக்ரீத்து) போன்ற பண்டிகைகள் வந்தன. இந்நிலையிலும் கூட தக்காளி விலை சரிவைத் தொடங்கியது. தற்பொழுது தேவதானப்பட்டி பகுதியில் ஓர் அயிரைக்கல் தக்காளி உரூ.5 வரை விற்பனை ஆகிறது. இதனால் உழவர்கள் சோகத்தில் உள்ளனர். தக்காளி எடுப்பதற்கு ஆகும் செலவைக்கூட ஈடு கட்டமுடியாமல் உரத்திற்காவது பயன்படும் என்று தக்காளியை அப்படியே தோட்டத்தில் பறிக்காமல் விட்டுவிட்டனர்.
thevathanappatti_tomotto
vaigaianeesu_name02