senthamizh-arakkattalai-manappaarai+seyanthan01
மறைந்த எழுத்தாளர் செயந்தன் நினைவாக, மணப்பாறையில் இயங்கும் ‘செந்தமிழ் அறக்கட்டளை’ ஒவ்வோர் ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்களைத் தேர்ந்தெடுத்து ‘செயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்’ வழங்கி வருகிறது. 2013ஆம் வருடத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறந்த புதின விருது :
 நிசந்தன் எழுதிய ‘என் பெயர்’,
ஏக்நாத்து எழுதிய ‘கெடை காடு’ ஆகியவையும்
சிறந்த நாடக நூலுக்கான விருது :
க. செல்வராசின் ‘நரிக்கொம்பு’
சிறந்த சிறுகதைகள் விருது:
புதிய மாதவி எழுதிய ‘பெண் வழிபாடு’
செயந்தி சங்கர் எழுதிய ‘செயந்தி சங்கர் சிறுகதைகள்’
சிறந்த கவிதை விருது:
இரா.வினோத் எழுதிய ‘தோட்டக் காட்டீ’ கவிதைத்தொகுப்பு,
சான் சுந்தர் எழுதிய ‘சொந்த (இ)ரயில்காரி’ கவிதைத்தொகுப்பு
கவிதைக்கான சிறப்பு விருது :
திலகபாமாவின் கவிதைத் தொகுப்பு
(ஒளிப்படங்களைப் பெரிதாகக் காணச்சொடுக்கிப் பார்க்கவும்)
விருதுகள் வழங்கும் விழா
ஆடி 17, 2045 / ஆகத்து 2, 2014, சனிக்கிழமை,
மாலை சென்னை தி. நகரிலுள்ள
சர் பிட்டி தியாகராயர் கலை அரங்கத்தில்
நடைபெறுகிறது.
மாலை 4.00 மணிக்கு செயந்தன் படைப்புகள் குறித்த கருத்தரங்கமும்,
5.30 மணிக்கு, ஞாநியின் இயக்கத்தில் செயந்தன் எழுதிய ‘மனுசா மனுசா’ நாடகமும் நடைபெறும்.
இரவு 7.00 மணிக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெறும்.
சிறந்த நூல்களுக்கான விருதுகளை ஆண்டுதோறும் வழங்கும் செந்தமிழ் அறக்கட்டளைக்குப் பாராட்டுகள்.
செந்தமிழ் அறக்கட்டளை வழங்கும் விருது என்பதால் நடையில் மொழித்தூய்மையைப் பேணுமாறு வேண்டி விருது பெறும் படைப்பாளர்களுக்கு அகரமுதல வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது.
(க. செல்வராசு   படமும் பரிசுபெற்ற ‘நரிக்கொம்பு’ ‘தோட்டக் காட்டீ’ நூல்களின் அட்டைப்படங்களும் கிடைக்கவில்லை. இருப்பவர்கள்அனுப்பி வைப்பின் அவற்றையும் இப்பகுதியில் சேர்க்க இயலும் என அன்புடன் தெரிவிக்கிறோம்.)