germany_writer04
செருமனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் எழுத்தாளர்களின் பாராட்டு விழா கடந்த 27.04.2014 ஞாயிற்றுக்கிழமை 15.30 மணியளவில் பெருந்திரளான மக்களின் வரவேற்போடு (International Zentrum – Flachs Markt– 15. 47051 Duisburg என்ற முகவரியில் அமைந்த) பன்னாட்டு மண்டபத்தில் திருமதி சந்திரகௌரி சிவபாலன், திருமதி கெங்கா தான்லி, திருமதி கீதா பரமானந்தம் ஆகியோர் மங்கல விளக்கேற்றத் தொடங்கியது.
நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நமது எழுத்தாளர்களை, கலைஞர்களை, ஊடகவியலாளர்களை, அவர்கள் வாழும் காலத்திலேயே, அவர்களைச் சிறப்பித்துப் பாராட்டி வாழ்த்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தைக் கொண்டு, நடைபெற்ற விழாவில் தாயகத்தின் விடியலுக்காக தம்முயிரை ஈந்த எம் உறவுகளின் உயிர்ப்பு இளைப்பாற்றலுக்காக இருநிமிட மௌன அஞ்சலி நிகழ்த்தப்பட்டதனைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்தினை டோர்ட்மூண்டு வள்ளுவர் தமிழ்ப்பாடசாலையின் மாணவிகளான செல்விகள் இரசீவா சிறிசீவகன் சாதுசா அருணகிரிநாதன், சௌமியா சிவகுமாரன் ஆகியோர் இனிமையாய்ப் பாடினர்.
இதனைத் தொடர்ந்து தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொருளாளரும் ஒபகொசன் அறிவாலயம் தமிழ்ப்பாடசாலை ஆசிரியருமான திரு.அம்பலவன்புவனேந்திரன் அவர்கள் கவிதையால் தன் வரவேற்புரையை வழங்கினார்.
அடுத்து வரவேற்பு நடனம் இடம்பெற்றது. கண்களுக்கும் மனதுக்கும் விருந்துபடைத்த வரவேற்பு நடனத்தினை ஒபகௌசன் அறிவாலயம் தமிழ்ப்பாடசாலை ஆசிரியரான திருமதி.கலைநிதி சபேசன் அவர்களின் மாணவிகளான செல்வி கவிநிலா சபேசன் செல்வி நர்த்திகா நகுலேசுவரன் செல்வி மதூசி நகுலேசுவரன் ஆகியோர் படைத்தனர்.
இதனைத் தொடர்ந்த கலை நிகழ்வாக வீட்சே கலைவாணி இசைப்பள்ளி மாணவர்களான செல்வி சகானா முருகதாசு செல்வி சோபினா யோகநாதன் செல்வி சர்மிலி பால்ராசா செல்வி அபிராமி பரமானந்தன் செல்வன் சோனுசன் யோகநாதன் ஆகியோரின் இசைப்பாடல் இனிமைக்கு இனிமை சேர்த்ததெனலாம்.
germany_writer02தொடர்ந்து தலைமையுரை இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டதனையடுத்து செருமனித் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும் மண் கலையிலக்கிய சஞ்சிகையின் ஆசிரியருமான திரு. வைரமுத்து சிவராசா அவர்கள் மிகச்சுருக்கமாக தமதுரையை நிகழ்த்தியதையடுத்து டோர்ட்மூண்டு வள்ளுவர் தமிழ்ப்பாடசாலையின் இசைவகுப்பு மாணவர்களான செல்விகள் இரசீவா சிறிசீவகன் சாதுசா அருணகிரிநாதன், செமியா சிவகுமாரன். செல்வி ஆர்த்திகா நடனபாதம் ஆகியோரின் வில்யாழிசைக்கு   செல்வன் இராகுல் இரவீந்திரர் மிருதங்கம் வாசித்து மெருகேற்றினார்.
தொடர்ந்த நிகழ்வில் வள்ளுவர் தமிழ்ப்பாடசாலையின் இசைவகுப்பு மாணவனான செல்வன் இராகுல் இரவீந்திரர் வழங்கிய சுரத்தட்டு இசை இடம்பெற்றது. தமிழ்த் திரைப்பாடல்களைத் தன் சுரத்தட்டு இசையில் வெளிப்படுத்தியது அனைவரையும் கவர்ந்ததென்பதற்கு மண்டபம் அமைதியில் மூழ்கிச் சுவைத்ததனை என்னால் காணமுடிந்தது.
தொடர்ந்து இருபதுநிமிட இடைவேளை இடம்பெற்றது. பல்வகைப்பட்ட சிற்றுண்டிகள் பொதிகளில் இடப்பட்டு பார்வையாளர்களுக்குத் தம் இருக்கைகளுக்கு   செருமனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இளையோர்களால்   வழங்கப்பட்ட வேளையிலும் இசைக்கதம்பம் மண்டபத்தை நிரப்பிக்கொண்டேயிருந்தது.
இடைவேளையானது முப்பது நிமிடத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது விழாவின் சிறப்பு நிகழ்வு தொடங்கயிருப்பதையறிந்து பார்வையாளர்கள் விரைந்து மண்டபத்துள் நுழைந்தனர்
தாயகத்திலும், புலம்பெயர்ந்த தேசங்களில் ஒன்றான செருமனியிலும் கலை, எழுத்து, பொதுப் பணிகளை நீண்டgermany_writer03 
நெடுங்காலமாகத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும், தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினர்களில் ஐவருக்குப் பாராட்டுவிழா ஒன்றினை நடாத்துகின்ற இவ்வேளையில் இவர்களில் தமிழ் எழுத்தாளர்சங்கத்தின் முன்னாள்செயலாளரும் நாவலர் தமிழ்ப்பாடசாலையின் முன்னாள் பொறுப்பாளருமான திரு.க.அருந்தவராசா அவர்கள் தற்போது இலங்கையில் வசித்தவருகின்ற காரணத்தினால் இவ்விழாவில் கலந்துகொள்ளவில்லை என்பதனை வெளிப்படுத்தியதோடு, இவருடன் திருமதி கலைவாணி ஏகானந்தராசா அவர்கள், திரு. க. பத்மகுணசீலன் அவர்கள் திரு புத்திசிகாமணி அவர்கள், திருமதி செயா நடேசன் அவர்கள்     ஆகியோர் தமிழ், எழுத்து, கலைப்பணிகளையும், சமுகப்பணிகளையும்; தொடர்ந்து செய்வதோடு, எமது எழுத்தாளர் சங்கத்தோடு தொடர்ந்தும் சேவை புரிந்து வருபவர்கள்.
இவர்களை, தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவரான திரு. வைரமுத்து சிவராசா அவர்கள்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவரும்   செருமனித் தமிழ்க் கல்விச் சேவையின் தலைவருமான திரு பொன் சிறிசீவகன் அவர்கள் செருமனித் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொருளாளர் திரு.அம்பலவன்புவனேந்திரன் அவர்கள், பிற உறுப்பினர்களுடனும் செருமனித் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இளையோர்களுடனும் பாராட்டுப்பெறுகின்ற சான்றோர்களை மேடைக்கு அழைத்துவந்து அமரச்செய்தனர்
தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும் மண் கலையிலக்கிய சஞ்சிகையின் ஆசிரியருமான திரு. வைரமுத்து சிவராசா அவர்கள் இவர்களைப்பற்றிய சிறுகுறிப்புரையை நிகழ்த்தியதனைத் தொடந்து பாராட்டுக்களுக்கான ஏற்பாடுகள்   விரைவாக நடந்தேறின.
முதலில் தமிழின தமிழ்மொழி தமிழ்ச்சமூக முன்னேற்றத்துக்கான கலை இலக்கியப்பணிகளை சிறப்பாகச் செய்துகொண்டிருக்கின்ற திரு. க. பத்மகுணசீலன் அவர்களைப்பற்றிய குறிப்புக்களையும் சிறப்புக்களையும் திரு பொன் சிறிசீவகன் அவர்கள் தெரிவித்தனையடுத்து தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவரான திரு. வைரமுத்து சிவராசா அவர்கள் திரு. க. பத்மகுணசீலன் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தியும் திரு பொன் சிறிசீவகன் அவர்கள் சந்தனமாலையணிவித்தும் சிறப்பித்தனர்.
தொடர்ந்து தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொருளாளரும் ஒபகொசன் அறிவாலயம் தமிழ்ப்பாடசாலை ஆசிரியருமான திரு.அம்பலவன்புவனேந்திரன் அவர்கள் நினைவுக்கேடயத்தினை வழங்கிப்பாராட்டி வாழ்த்துகளைப் பெற்றார். பலத்த கைதட்டுகளிடைய நிறைவேறிய இந்நிகழ்வினையடுத்து, அடுத்துபாராட்டைப் பெறுபவரான திருமதி கலைவாணி ஏகானந்தராசா அவர்களைப்பற்றிய குறிப்புரைகளை திரு பொன் சிறிசீவகன் அவர்கள் தெரிவித்தார்.
தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முதன்மை உறுப்பினர்களில் ஒருவரான திருமதி இராசேசுவரி அவர்கள் பொன்னாடைபோர்த்த திருமதி சந்திரகௌரி சிவபாலன் அவர்கள் சந்தன மாலையணிவிக்க திருமதி. இராதா புத்திசிகாமணியவர்கள் நினைவுக்கேடயத்தினை வழங்கினார். அடுத்து, தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொதுச்செயலாரான திரு. பொன். புத்திசிகாமணியவர்களைப்பற்றிய குறிப்புக்கள் வாசிக்கப்பட்டன.
திரு. வைரமுத்து சிவராசா அவர்கள் பொன்னாடை போர்த்த திரு. ப.பசுபராசா அவர்கள் சந்தன மாலையணிவித்துச் சிறப்பித்தார்.
தொடர்ந்து திருமதி கெங்கா தான்லி அவர்கள் நினைவுக்கேடயத்தினை வழங்கினார். திருமதி செயா நடேசன் அவர்களின் குறிப்புரைகள் வாசிக்கப்பட்டதனையடுத்து, திருமதி கீதா பரமானந்தன் அவர்கள் பொன்னாடையினைப்போர்த்த திருமதி கிளி சிறிசீவகன் அவர்கள் சந்தன மாலையணிவிக்க திருமதி சுலோசனா புவனேந்திரன் அவர்கள் நினைவுக்கேடயத்தினை வழங்கியபோது மீண்டும் கைத்தட்டல் ஒலி மண்டபத்தினை அதிரவைத்தது.
தொடர்ந்து பாராட்டைப்பெறுபவர் பெயர் வாசிக்கப்பட்டது. தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் நாவலர் தமிழ்ப்பாடசாலையின் முன்னாள் பொறுப்பாளருமான திரு.க.அருந்தவராசா அவர்கள் பற்றிய குறிப்புரைகளை வழங்கிய பின், அவருக்குரிய சிறப்புகளை, அவர் சார்பில், அவரது உடன்பிறப்பான திருமதி கலா சிவகுமாரன் அவர்கள் த.எ.ச.தலைவர் திரு. சிவராசா அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
தொலைபேசி வாயிலாகத் தம் வாழ்த்துகளைத் தெரிவித்தவர்களின் பெயர்கள் வாசிக்கபட்டன. அனைவருக்கும் நன்றி தெரிக்கப்பட்டதோடு விழா இனிதே நிறைவுக்கு வந்தது.
germany_writer01
செருமனியிலிருந்து கவிச்சுடர் அம்பலவன்.புவனேந்திரன்