புதன், 19 பிப்ரவரி, 2014

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி முதலான 7 பேர் விடுதலை- தமிழக அரசு முடிவு!!

இராசீவு கொலை வழக்கு: பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி  முதலான 7 பேர் விடுதலை- தமிழக அரசு முடிவு!!

இராசீவு கொலை வழக்கில் தூக்கு  நீக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை உடனே விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதே வழக்கில்  வாணாள் தண்டனை  அடைந்து வரும் நளினி,இராபர்ட்டு பயசு, செயக்குமார்,  இரவிச்சந்திரன் ஆகியோரையும் உடனே விடுதலை செய்யவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக சட்டசபையில் விதி எண் 110- இன் கீழ் முதல்வர் செயலலிதா இன்று  ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில், விடுதலை அறிவிப்பைத் தெரிவித்தார்.
 "இந்த முடிவு குறித்து மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துவோம். மத்திய அரசு 3 நாளுக்குள் மறுமொழி தெரிவிக்காவிட்டால் மாநில அரசு அனைவரையும் விடுதலை செய்யும்" என்றும் தெரிவித்தார்.

கலைஞர் தனக்குக் கிடைத்த மனித நேய நல்வாய்ப்பைப் பயன்படுத்தாமல் ஆட்சி பறிபோனபின்பு தேர்தல்  நோக்கில் கூக்குரலிடுகிறார். அவ்வாறு இல்லாமல், உச்சநீதிமன்றம் வாய்ப்பு வழங்கியதும் அதைப் பயன்படுத்தி மனித நேயத்துடன் விரைந்து நடவடிக்கை எடுத்த முதல்வரைத் தமிழுலகம் பாராட்டுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக