திங்கள், 30 செப்டம்பர், 2013

இனித் தண்­ணீரை வீணாக்­காதீர்!

இனி த் தண்­ணீரை வீணாக்­காதீர்!

கழுவுக் கிண்ணியிலி­ருந்து வீணாகும் கழி­வு­நீரை, குறைந்­த­பட்ச மறு­சு­ழற்சி மூலமே நன்­னீ­ராக மாற்றி, மீண்டும் பயன்­ப­டுத்தும் முறையை கண்­டு­பி­டித்த, வைசுணவ்வு
: நான், சென்­னையில் உள்ள, லயோலா கல்­லுா­ரியில், பி.எஸ்சி., வேதி­யியல், இரண்டாம் ஆண்டு படிக்­கிறேன். 'மழைநீர் சேக­ரிப்பு திட்டம்' போன்ற எதையும், தங்கள் வீடு­களில் செயல்­ப­டுத்த, மக்கள் முன்­வ­ரு­வது இல்லை. அதனால், கோடைக்­காலம் வந்­த­வுடன், சென்­னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்­ப­டு­கி­றது. தண்­ணீரை வீணாக்­காமல், 'வேஸ்ட் வாட்டர் மேனேஜ் மென்ட்' என்ற திட்டம் மூலம், தண்­ணீரின் அவ­சி­யத்தை மற்­ற­வர்­க­ளுக்கு உணர்த்த, வாஷ்­பே­சி­னி­லி­ருந்து வீணாகும் கழி­வு­நீரை, குறைந்­த­பட்ச மறு­சு­ழற்சி செய்து, நன்­னீ­ராக மாற்றும் முறையை கண்­டு­பி­டித்தோம். வாஷ்­பே­சி­னி­லி­ருந்து வரும் கழி­வு­நீரில், சமையல் கழி­வு­களே இருக்கும். அதை பெரிய தொட்­டியில் சேமித்தால், உணவு கழி­வுகள் அடியில் தங்கி விடும். மேலே தேங்­கி­யுள்ள சமையல் எண்­ணெய்யை நீக்­கி­னாலே, இடைப்­பட்ட நீர், ஓர­ள­விற்கு சுத்­த­மா­கி­விடும். ஆனால், பாத்­திரம் கழுவ பயன்­ப­டுத்­தப்­படும் வேதிப்­பொ­ருளில் உள்ள, 'பாஸ்பேட்' உப்பு மட்டும் நீரில் கலந்­து­விடும். அந்த நீரினுள், ஆக்­சி­ஜனை செலுத்­தினால், பாசிகள் உரு­வாகி, பாஸ்பேட் உப்பை தின்­று­விடும். இதன் மூலம் கழி­வு­நீ­ரா­னது, 80 சத­வீதம் சுத்­த­மா­கி­விடும். வெட்­டிவேர், தண்­ணீரில் உள்ள நுண்­ணிய கழிவு உப்­பு­களை அழிக்கும் திறன் வாய்ந்­ததால், அதை பயன்­ப­டுத்தி, 95 சத­வீதம், சுத்­த­மான நீரை எளி­தாக பெறலாம். இம்­முறை, தண்ணீர் வீணா­வதை தடுப்­ப­துடன், தண்­ணீரின் அவ­சி­யத்­தையும் உணர்த்­து­வ­தாக பாராட்­டினர். இதற்­காக, அதிகம் செலவு செய்ய தேவை­யில்லை. உடல் உழைப்பு இருந்­தாலே போதும். சமீ­பத்தில், சென்னை மகளிர் கிறிஸ்­தவ கல்­லுா­ரியில் நடை­பெற்ற அறி­வியல் போட்­டியில், என் கண்­டு­பி­டிப்­புக்கு, முத­லிடம் கிடைத்­தது. அதற்­காக, சென்னை மாந­க­ராட்சி மேய­ரி­ட­மி­ருந்து, 3,000 ரூபாய் ரொக்க பரிசும், 2,000 ரூபாய் மதிப்­பி­லான புத்­த­கங்­களும் பரி­சாக பெற்றேன். தொடர்­புக்கு: 98404 45869.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக