ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

கரைவேட்டி பறவைகள் சரணாலயம்

கரைவேட்டி பறவைகள் சரணாலயம்






















 
பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கரைவேட்டி பறவைகள் சரணாலயம் மிகச் சிறந்த சரணாலயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
321 சதுர அடியில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தில் சுமார் 90 அரிய வகை நீர்ப் பறவைகள் உட்பட 188 அரிய வகை பறவைகள் வந்து தங்கியுள்ளன. வெளிநாடுகளில் இருந்து மட்டும் அல்லாமல், இங்கு எப்போதும்  ஏராளமான நீர் வாழ் பறவைகள் இருப்பதால் இது ஆண்டு முழுவதும் திறந்திருக்கும் சரணாலயமாக திகழ்கிறது.
பார்ஹெட்டட் கூஸ், கிரே நிற பெலிகான், 16 வகையான வாத்துகள், வெள்ளை கழுத்து ஸ்டோர்க், ஸ்பூன்பில், இபிஸ், ஷோவெல்லர், குளோஸி இபிஸ், வெள்ளை இபிஸ், கூட்  என இங்கு பல விதமான பறவைகள் நிறைந்திருக்கின்றன. நவம்பர் மாதத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த ஏரிப் பகுதிக்கு வரும் பறவைகள், இனப்பெருக்கம் செய்து மே மாதம் வரை தங்கியிருக்கின்றன.  பிறகு தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்புகின்றன. எனவே, இங்கு நவம்பர் முதல் மே மாதம் ஏராளமான பறவைகள் நிறைந்திருக்கும். அதிலும் ஜனவரி மாதத்தில் தான் இங்கு அதிகமான பறவைகள் இருக்கும். அதுதான் இங்கு பீக் சீசன் என்று கூறப்படுகிறது. ஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பறவைகள் இந்த சரணாலயத்தில் நிறைந்திருக்குமாம்.
இந்த சரணாலயம் திருச்சியில் இருந்து 50 கி.மீ. தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து 35 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. அரியலூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் இந்த சரணாலயம் அமைந்துள்ளது.
இதனை காண சிறந்த சீசன் என்றால் அது டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலமாகும். இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இலவசம்.
தங்கும் வசதி என்றால், அது தஞ்சாவூர் அல்லது திருச்சியில் உள்ள ஹோட்டல்களில் தான் சுற்றுலாப் பயணிகள் தங்க வேண்டியதிருக்கும்.
இந்த சரணாலயத்துக்கு அருகில் தஞ்சாவூர், திருச்சி ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக