ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

சிதம்பரத்தில் மனைவி நல வேட்பு நாள்

சிதம்பரத்தில் மனைவி நல வேட்பு நாள்: 43 இணையர் பங்கேற்பு







சிதம்பரம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பில் வேதாத்திரி மகரிஷி வழிகாட்டுதலின் பேரில் சிவசக்திநகர் அறிவுத் திருக்கோயில் வளாகத்தில் மனைவி நல வேட்புநாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் 43 தம்பதியினர் பங்கேற்றனர். கணவன், மனைவி இருவரும் கைகோர்த்து, ஒருவரை, ஒருவர் பார்த்துக்கொள்ளும் உணர்வுகள் பரிமாற்ற தியானம் நடைபெற்றது. பின்னர் கணவன் மனைவிக்கு பூவும், மனைவி கணவனுக்கு பழமும் வழங்கி தங்களது உணர்வுகளையும், மகிழ்ச்சியான வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் ரா.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். க.தமிழ்ச்செல்வன் வரவேற்றார். பேராசிரியர் கே.பி.கிருஷ்ணமூர்த்தி மகளிருக்கான கட்டுரை தொகுப்பு மலரினை வெளியிட்டுப் பேசினார். அவர் பேசுகையில் தம்பதியினர் இனக்கமாக வாழும் வழியும், விட்டுகொடுத்தல், சகிப்புத்தன்மை, தியாகம் ஆகியவற்றை பின்பற்றி குடும்ப அமைதியை உருவாக்கி கொள்ளும் ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் வழக்குரைஞர் என்.சேதுராமன், தமிழாசிரியை ஜி.சுந்தரி ஆகியோர் மதிப்பீட்டு உரையாற்றினர். அருள்நிதி ராஜசேகரன் நன்றி கூறினார். நிகழ்ச்சியினை ச.சீனுவாசன் தொகுத்து வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக