வியாழன், 8 ஆகஸ்ட், 2013

விந்தை விலங்குகள்

தினஇதழ் Home / அபூர்வ தகவல்கள் / விந்தையான மிருகங்கள்
விந்தையான மிருகங்கள்

விந்தையான மிருகங்கள்

ஆல்பகா
இவை பார்ப்பதற்கு செம்மறி ஆடுகள் போல் இருக்கும் ஆனால் இவற்றின் கழுத்து மட்டும் நன்கு நீண்டு இருக்கும். இவை ஒட்டகத்தின் ஒரு வகை. பல வண்ணங்களில் இருக்கும் இவை ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா பகுதிகளில் இருக்கும்.
கொமாண்டர் நாய்
இந்த நாய் பார்ப்பதற்கு ஏதோ நூலைக் கட்டித் தொங்கவிட்டது போல் சடை சடையாக இருக்கும். அதன் உடலின் எந்த பாகத்தையும் நாம் பார்க்க முடியாது . இந்த சடைகள் இரண்டு அடுக்குகளாகவும் மிக மெல்லினவையாகவும் இருக்கும். உயரம் வெறும் 27 இன்ச் தான்.
எம்பரர் தேமரின்
இது பார்பதற்கு அணில் போன்று இருக்கும் குரங்கு வகை. இவற்றுக்கு பெரிய மீசை இருக்கும். ஜெர்மனியின் அரசர் வில்ஹெல்ம் போல் இருப்பதால் இதை எம்பரர் என்று அழைத்தனர். பின்பு அதுவே பெயராகிவிட்டது . இது பெரு , பொலிவியா , பிரேசில் காடுகளில் காணப்படும். இவை 26 சென்டி மீட்டர் உயரம் உள்ளவை. எடை 300 கிராம் தான் .
வெள்ளை முக சங்கி மங்கி
போக்கிரி படத்தில் நமது வடிவேல் சொல்வாரே சங்கி மங்கி என்று அந்த பெயரில் ஒரு மிருகம் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும். குரங்கு வகையை சேர்ந்த இவற்றுக்குப் பிடித்த உணவு பூச்சிகளும், கொட்டைகளும் தான். இவை பிரேசில், வெனிசுலா காடுகளில் இருக்கும்.
அங்கோரா முயல்
இது வீட்டில் வளர்க்கப்படும் முயல். பார்ப்பதற்கு பொமரேனியன் நாய் போல் இருக்கும். நாகரிகம் வளரத் தொடங்கிய தொட்டே இது வளர்ப்பு பிராணியாக இருந்து வருகின்றது . இம்முயலை வளர்ப்பது பிரான்சில் பெரிய குடும்பத்து மனிதர்கள் என்பதற்கான அடையாளமாம்.
சிவப்பு பாண்டா
பாண்டா குடும்பத்தை சேர்ந்ததாக இருந்தாலும் பார்ப்பதற்கு பூனையைப் போல் இருப்பதால் இதை பூனை என்றும் சொல்கின்றார்கள். இவற்றின் குரல் இனிமை காரணமாக இவற்றை பாடும் பூனை என்றும் அழைக்கிறார்கள். நேபாளத்தில் அதிகம் காணப்படும் இவை 55 சென்டி மீட்டர் உயரமே இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக