புதன், 21 ஆகஸ்ட், 2013

தமிழ் தெரியாத பள்ளி மாணவர்கள்: சிறப்புப் பயிற்சி

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_785250.jpg 


தமிழ் தெரியாத பள்ளி மாணவர்கள்: சிறப்பு ப் பயிற்சி அளிக்க அரசு திட்டம்




தமிழக ப் பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரில், தமிழ் எழுத, படிக்கத் தெரியாதவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.

மேல்நிலைக் கல்வி கற்க வரும் மாணவ, மாணவியரில் பலருக்கு, தமிழில் எழுத, படிக்கத் தெரியாத நிலை உள்ளது. தமிழில் எழுத, படிக்க சிரமப்படுவது குறித்து, பள்ளிக்கல்வித் துறை ஆய்வு செய்தது. இதையடுத்து, அந்த வகை மாணவ, மாணவியருக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டு, அதற்காக, செயல்முறை புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
இந்த திட்டத்தில், ஒவ்வொரு மாவட்ட கல்வித் துறையில் இருந்தும், தமிழாசிரியர்கள் மூன்று பேருக்கு, சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக, ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. பயிற்சி பெற்ற தமிழாசிரியர்கள், அந்தந்த மாவட்டங்களில், மற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பர். பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மாணவ, மாணவியருக்கு, செயல்முறை புத்தக பாட அடிப்படையில், பயிற்சியளிக்க உள்ளனர். இந்த சிறப்பு திட்டம், விரைவில் நடைமுறைக்கு வர உள்ளதாக, கல்வித் துறை தெரிவித்து உள்ளது.


-  தினமலர் செய்தியாளர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக