சனி, 31 ஆகஸ்ட், 2013

வீட்டை விட்டு துரத்திய மகன்: தாய் "குடில்' கட்டிப் போராட்டம்

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_792439.jpg


வீட்டை விட்டு துரத்திய மகன்: தாய்  "குடில்' கட்டிப் போராட்டம்

கேரள மாநிலம், பாலக்காடு அருகே, தச்சம்பாறை ஊராட்சியில் வசிப்பவர் பாவு அம்மாள், 70; விதவை. இவருக்கு ஆறு பிள்ளைகள். கணவர் சாம்பாதித்த, 75 சென்ட் நிலம் சொந்தமாக உள்ளது. இதில் உள்ள வீட்டில், இளைய மகன் ரவி, மனைவியுடன் வசிக்கிறார். தாயை இவர், முறையாக பராமரிக்கவில்லை என்றும், அறையில் அடைத்து, சித்திரவதை செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. கடந்த, ஏப்., மாதம், சேவை அமைப்பினர், பாவு அம்மாளை மீட்டு, மகள் பராமரிப்பில் அனுப்பினர். போலீசார் பேச்சு நடத்தி, தாய்க்கு, மாதந்தோறும், 5,000 ரூபாய், பராமரிப்புக்காக வழங்க வேண்டும் என்றும் கூறினர். இந்த நிலையில், நிலத்தில் பெரும்பகுதியை, ரவி விற்று விட்டார். அதில், ஒரு பைசா கூட, தாய்க்கு தரவில்லை; மாதாந்திர பராமரிப்பு தொகையையும் தரவில்லை. மகள் வீட்டிலிருந்து வெளியேறி, இளைய மகன் விற்ற, 76 ஏக்கர் நிலத்தில் குடியேறினார். "வாழ்ந்தாலும், இறந்தாலும், இங்கு தான் இருப்பேன்' என, போராட்டம் நடத்தினார். இளைய மகன், தாயை, வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. இதனால், வீட்டின் அருகே, குடில் அமைத்து, அதில் குடியேறி, மகனுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார். இவருக்கு, அப்பகுதி மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மண்ணார்க்காடு போலீசாரிடமும், பாவு அம்மாள் புகார் செய்துள்ளார். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக