சனி, 31 ஆகஸ்ட், 2013

ஒரே ஊசியில் எல்லா வலியும் நீங்கும்!

ஒரே ஊசியில் எல்லா வலியும் நீங்கும்!

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_792534.jpg

ஒரே ஒரு ஊசி மூலம், உடலில் ஏற்படும் அனைத்து வலிகளுக்கும், நிரந்தர நிவாரணம் தரும் முறையை கூறும், மருத்துவர் பிரபு: நான், சென்னையை சேர்ந்தவன். வலி நிர்வாகம் எனும், "இன்டர்வென்ஷனல் பெயின் மேனேஜ்மென்ட்' சிகிச்சை அளிக்கும், சிறப்பு மருத்துவராக பணியாற்றுகிறேன். அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு என, சொல்லக் கூடிய உடல் நல பிரச்னைகள் பல உள்ளன. குறிப்பாக, 50 வயதை கடந்த, 90 சதவீதம் பேர், கடுமையான முழங்கால் வலிக்கு ஆளாகின்றனர். இம்முழங்கால் வலி யை நீக்க, அறுவை சிகிச்சை மட்டும் தான் தீர்வாக இதுவரையில் இருந்தது. இதற்கு, அதிக பணம் செலவாகும். சர்க்கரை நோய், ரத்தகொதிப்பு பிரச்னை உள்ளவர்கள், அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. இதுபோன்ற பிரச்னைக்கு தீர்வு காண்பது தான், வலி நிர்வாகம் எனும் மருத்துவ முறை. இளைஞர்கள் முதல் பெரியோர் வரை, முதுகு தண்டுவடத்தில் ஜவ்வு பிதுங்கி, பலத்த வலி உண்டாகும். வலியிலிருந்து விடுபட, அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு மாற்றாக, வலி நிர்வாக முறைப்படி, "ஹைட்ரோசிஷன்' என்ற ஒரே ஒரு ஊசியால், சுலபமாக நிவாரணம் பெற முடியும். பொதுவாக, தண்டுவடத்தில் செய்யப்படும் அறுவை சிகிச்சை, நிரந்தர தீர்வளிக்காது. மேலும், பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். "மெனோ பாஸ்' மற்றும் கர்ப்பப்பை நீக்கப்பட்ட காலத்தில், பெண்களுக்கு உடல் ரீதியாக பல்வேறு மாற்றங்கள் உண்டாகும். குறிப்பாக, உடலில் சுண்ணாம்புச் சத்து குறைய ஆரம்பிப்பதால், உடலில் வலி அதிகரிக்கும். ஆனால், இப்புதிய சிகிச்சை முறை மூலம், சுண்ணாம்புச் சத்தின் அளவை குறைய விடாமல் தடுக்கலாம். கடந்த, 30 ஆண்டுகளாக, மேல் நாடுகளில் இம்முறை பின்பற்றப்படுகிறது. ஆனால், இந்தியாவில் பரவலாக அறிமுகமாகி, நான்கு ஆண்டுகள் தான் ஆகிறது. இப்புதிய சிகிச்சை முறைக்கு, 10 முதல், 12 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும். ஆனால், இதை விட அறுவை சிகிச்சைக்கு பன்மடங்கு செலவாகும்.  
தொடர்புக்கு: 98407 88888.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக