புதன், 7 ஆகஸ்ட், 2013

பல்லாயிரம் ஆண்டுத் தொடர்ச்சியாகத் தமிழ்ச் சொற்கள் நிலைப்பு - உவா

உவா என்னும் சொல் நிலவைக் குறிக்கும். முதலில் பொதுவாக உவா என்பது முழுநிலவுநாளாகிய பௌர்ணமியையும் இருள்நிலவு நாளாகிய அமாவாசையையும் குறித்தது. பின்னர்   முறையே வெள்ளுவா, காருவா என்றனர். காருவா என்பதுதான் கருத்தஉவா என்றாகி இப்பொழுது கருத்தவாவு என்று வழங்குகிறது. பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்ச்சியாகத் தமிழ்ச் சொற்கள் நிலைத்து வருவதற்கும் பழந்தமிழ்ச் சொற்களே மலையாளத்தில் உள்ளன என்பதற்கும் இச்சொல்லே சான்றாகும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

"கருத்தவாவு' நாளில் குறைந்தது மழை
மூணாறு: தினமும் பெய்த பலத்த மழை, "கருத்தவாவு' நாளான நேற்று குறைந்ததால், மூணாறு பகுதி மக்கள் நிம்மதி யடைந்தனர். கேரளாவில் ஆடி அமாவாசை தினத்தை"கருத்தவாவு' என அழைக்கின்றனர். இந்நாளில் பலத்த மழை பெய்யும், என்பதால், ஆடி அமாவாசை நாளில், ஆண்டுதோறும் கேரளா அரசு விடுமுறை அளித்து வருகிறது. இந்நிலையில், ஆண்டு முழுவதும் கேரளாவில் பெய்யும் சராசரி மழையை விட, கடந்த 2 மாதங்களில், பல மடங்கு கூடுதலாக மழை பெய்துள்ளது. கன மழையால், நிலச்சரிவு மூலம் ஏற்பட்ட உயிரிழப்புகள், மக்களை நடுங்கச் செய்த நிலையில், கருத்தவாவு நாளான நேற்று, வழக்கத்துக்கு மாறாக, மழை குறைந்து வெயில் அடித்ததால், மக்கள் நிம்மதியடைந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக