ஞாயிறு, 26 மே, 2013

சத் சங்க் நம் பிரசாத்தின் தான்சானியா பயணம்.

சத் சங்க் நம் பிரசாத்தின் தான்சானியா பயணம்...




Bookmark and Share
சத்சங்க் நம் பிரசாத்..
தற்போது 69 வயதாகும் இவர் அடிப்படையில் ஒரு கெமிக்கல் என்ஜீனியராவார். என்ஜீனியர் படிப்பு படித்திருந்தாலும் வியாபாரத்தில் ஈர்க்கப்பட்டு வியாபாரம் செய்துவருகிறார்.
கல்லூரியில் படிக்கும் காலத்தில் இவர் எடுத்த படங்கள் பலராலும் பாராட்டப்பட கடந்த 89ம் ஆண்டில் இருந்து சீரியஸ் போட்டோகிராபரானார். இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நடைபெற்ற புகைப்பட போட்டிகளில் கலந்து கொண்டு 9ஆயிரத்து 500 அக்சப்டன்ஸ் மற்றும் பல பரிசுகள் பெற்றுள்ளார், நிறைய போட்டிகளுக்கு நடுவராக இருந்துள்ளார், சென்னையில் உள்ள போட்டோகிராபி சொசைட்டி ஆப் இந்தியாவின் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்றுள்ளார்.
வைல்டு லைப் போட்டோகிராபி மீது மிகவும் ஆர்வம் கொண்டவர், இதற்காக இந்தியா முழுவதும் மட்டுமின்றி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கம்போடியா, பாலி, போஸ்வானா, ஜிம்பாப்வே, கென்யா,ஜாம்பியா,மற்றும் தான்சசானியா நாடுகளுக்கு போய்வந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் தான்சானியா போய்வந்த அனுபவங்களையும், படங்களையும் இங்கே பகிர்ந்து கொண்டுள்ளார்.
மூன்று புகைப்பட கலைஞர்கள் மற்றும் மூன்று இயற்கை ஆர்வலர்களைக் கொண்ட குழுவாக தான்சானியா சென்றோம், அங்கு காட்டி, நாதுடு, சரங் உள்ளிட்ட புகழ்பெற்ற காடுகளுக்குள் சென்று படம் எடுத்தோம்.
நாங்கள் சென்ற போது நிறைய பறவைகள், யானைகள், காட்டெருமைகள், சிங்கம், சிறுத்தை, வரிக்குதிரைகள் என்று எண்ணற்ற வனஉயிர்கள் எங்கள் கேமிராவில் சிக்கியது.
சில காடுகளில் உள்ள முகாம்களில் தங்கும் போது மின்சாரம், தண்ணீருக்கு பிரச்னை ஏற்பட்டது, ஆனால் வித்தியாசமான விலங்குகளைப் பார்த்ததும் அந்த கவலை பிரச்னை எல்லாம் காணாமல் போனது.
காடுகளை நன்கு பராமரிப்பதன் காரணமாக, அங்குள்ள மிருகங்களும், பறவைகளும் கொஞ்சம் கூட நோஞ்சான் தன்மை இல்லாமல் காட்டிற்கே உண்டான கம்பீரத்துடனும், கனபரிமாணத்துடனும் காணப்பட்டன.
தன்னுடைய எண்ணங்களை இளைஞர்களிடம் பகிர்ந்து கொண்டு அவர்களை புகைப்படத் துறையில் ஊக்கப்படுத்த விரும்பும் நம் பிரசாத்தின் தொடர்பு எண்: 9884039713. (இவர் தற்போது சிங்கப்பூரில் முகாமிட்டுள்ளார்.)
முக்கிய குறிப்பு: நம் பிரசாத் எடுத்த தான்சானியா நாட்டு கானகத்து படங்களை பார்க்க சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரியை கிளிக் செய்யவும்.

- எல்.முருகராசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக