புதன், 29 மே, 2013

வறண்ட நிலத் தாவரம்!

வறண்ட நில த் தாவரம்!

வறண்ட நிலத்திலும், நித்திய கல்யாணி பயிரிட்டு, ஆண்டுக்கு, 1 லட்சம் ரூபாய் லாபமீட்டும், எஸ்.வெங்கடேசன்: நான், தஞ்சை மாவட்டம், மெலட்டூரை சேர்ந்தவன். எனக்கு சொந்தமான நிலத்தில், தொடர்ச்சியாக நெல் மட்டுமே சாகுபடி செய்து வந்தேன். தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சி காரணமாகவும், மண் வளத்தை கூட்ட ஒரு மாறுதலுக்காகவும், மூன்றரைஏக்கர் நிலத்தில், நித்திய கல்யாணி எனும், பூச்செடியை பயிரிட்டேன்.நித்திய கல்யாணியை, "சுடுகாட்டுப்பூ' என்றே பரவலாக அழைப்பர். மருத்துவ குணம் அதிகம் கொண்ட இதன் அறிவியல் பெயர், "கேதராந்தஸ் ரோசியஸ்' ஆகும். சர்க்கரை வியாதி,மலேரியா, லுக்கேமியா எனும் ரத்த புற்றுநோய் போன்ற நோய்களுக்கு, சிறந்த மருந்தாக இருக்கிறது. இதிலிருந்து, "வின்பிளாஸ்டின், வின்கிறிஸ்ட்டின்' எனும், இரு முக்கிய உயிர் வேதிபொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.மிதவெப்பம் மற்றும் வெப்ப மண்டல பகுதிகளில், இது செழிப்பாக வளரும். நித்திய கல்யாணியின் விதைகளை, பரவல் விதை தெளிப்பு முறையில் விதைக்கலாம் என்றாலும், நாற்றங்கால் முறையே சிறந்தது. நாற்றங்கால் விட்ட, 40 முதல், 50 நாட்களுக்கு பின், தனியாக எடுத்து, அரை அடி இடைவெளியில், பாத்தி அமைக்காமலேயே நடவு செய்யலாம். வறண்ட நில தாவரம் என்பதால், 10 நாட்களுக்கு ஒரு முறைதண்ணீர் பாய்ச்சி, மாதம் ஒரு முறை உரமிட்டு வந்தாலே நன்கு வளரும்.நித்திய கல்யாணியை பயிரிட குறைந்த முதலீடும், குறைந்த மனித உழைப்பும், குறைந்த பராமரிப்பும், போதுமானது. இதை, நடவு செய்த, 90 நாட்களுக்குள் முதல் அறுவடையும், பின் அடுத்தடுத்த, 50 நாட்கள் இடைவெளியில் இரு முறை என, மொத்தம் மூன்று முறை அறுவடை செய்யலாம். அறுவடையின் போது, வேரிலிருந்து ஒரு அடி உயரத்தில் வெட்டி, மருத்துவ குணம் கொண்ட இலை மற்றும் தண்டு பகுதியை தனியே காய வைத்தால், ஏக்கருக்கு, 1.75 டன் வரை கிடைக்கும். கிலோவுக்கு, 50 ரூபாய் என்ற வீதத்தில்விற்பனை செய்தால், மூன்று முறைக்கும் சேர்த்து, 1 லட்சம் ரூபாய் வரை, லாபம் ஈட்டலாம். தொடர்புக்கு: 95970 11396.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக