செவ்வாய், 16 ஏப்ரல், 2013

புத்தகத் திருவிழா: முதல்வர் செயலலிதா தொடங்கி வைத்தார்

 புத்தகத் திருவிழா: முதல்வர் செயலலிதா தொடங்கி வைத்தார்


சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு புத்தகத் திருவிழாவை, தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே விடியோ கான்ஃபரன்சிங் முறை மூலம் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
இந்தப் புத்தகத் திருவிழா ஏப்ரல் 28 வரை சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
திங்கள்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச் செல்வன், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தப் புத்தகத் திருவிழா தமிழ் நூல் வெளியீடு மற்றும் தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமத்தின் சார்பில் முதல் முறையாக நடத்தப்படுகிறது. இந்தப் புத்தகத் திருவிழாவில் 150-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் காட்சி அரங்குகளை அமைத்துள்ளன.
புத்தகத் திருவிழாவில் தினமும் மாலை 6.30 மணிக்கு சிறப்புரை, கவியரங்கம், வழக்காடுமன்றம் ஆகியன நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சிகளில் சிறப்பம்சமாக மாற்றுத் திறனாளிகள் வழங்கும் கலை நிகழ்ச்சி வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது.
மாணவர்கள்-சிறுவர்களுக்கு அனுமதி இலவசம்: புத்தகக் கண்காட்சியில் பொது மக்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.5. மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். இரு சக்கர வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.10. வேலை நாள்களில் தினமும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் காட்சி அரங்குகள் திறந்திருக்கும்.
புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி: புத்தகக் காட்சியில் புத்தகம் வாங்குவோருக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கும், வாசகர்களுக்கும் வசதியாக சிற்றுண்டி, குடிநீர், கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளதாக புத்தகக் காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக