வியாழன், 21 மார்ச், 2013

சங்கரராமன் கொலைக் குற்றவாளி கதிரவன்-மர்மக் கும்பல் வெட்டிச் சாய்த்தது

சங்கரராமன் கொலை க் குற்றவாளி கதிரவன் வெட்டிக் கொலை:  சீருந்தில்  வந்த மர்ம க் கும்பல் வெட்டி ச்  சாய்த்தது
சங்கரராமன் கொலை குற்றவாளி கதிரவன் வெட்டிக் கொலை: காரில் வந்த மர்ம கும்பல் வெட்டி சாய்த்தது
சென்னை, மார்ச். 21-

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கடந்த 2004-ம் ஆண்டு செப்டம்பர் 3-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த கொலை வழக்கு புதுவை கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஜெயந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் பலமுறை கோர்ட்டில் ஆஜராகியுள்ளனர்.

சங்கரராமன் கொலை வழக்கில் ரவிசுப்பிரமணியம் அப்ரூவர் ஆனார். சங்கரராமன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கதிரவன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இவர் சென்னை கே.கே. நகர் சத்யா கார்டன் கிரி தெருவில் வசித்து வந்தார். இன்று காலை 8 மணியளவில் கதிரவன் தனது காரில் வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டார். காரை டிரைவர் ஓட்டினார்.

அப்போது எதிரே ஒரு காரில் 5 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள் கதிரவன் சென்ற காரை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் 5 பேரும் காரில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் இறங்கினார்கள்.

இதைப் பார்த்ததும் கதிரவன் அதிர்ச்சி அடைந்தார். காரில் இருந்து இறங்கி ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை துரத்தி சென்றது. ஓட ஓட விரட்டி கதிரவனை சரமாரியாக அரிவாளால் வெட்டியது.

இதில் கதிரவன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் அந்த கும்பல் காரில் ஏறி தப்பி சென்றுவிட்டது. காலை 8 மணியளவில் ஆள்நடமாட்டம் மிகுந்த வேளையில் நடந்த இந்த கொலையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கதிரவன் சென்ற காரை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். கதிரவன் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை தொடர்பாக டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது நம்பர் பிளேட் இல்லாத காரில் மர்ம கும்பல் வந்ததாக டிரைவர் தெரிவித்தார். தொடர்ந்து கதிரவன் கொலை தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

சங்கரராமன் கொலை செய்யப்பட்டதற்கும், கதிரவன் கொலை செய்யப்பட்டதற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? அல்லது வேறு காரணமாக கதிரவன் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக