வியாழன், 7 மார்ச், 2013

வெனிசுலா அதிபரின் மரணம் அமெரிக்காவின் சதி: இரசிய த் தலைவர் குற்றச்சாட்டு

வெனிசுலா அதிபரின் மரணம் அமெரிக்காவின் சதி:  இரசிய த் தலைவர் குற்றச்சாட்டு
வெனிசுலா அதிபரின் மரணம் அமெரிக்காவின் சதி: ரஷ்ய கம்யூனிஸ்டு தலைவர் குற்றச்சாட்டு
மாசுகோ, மார்ச்சு 7-

வெனிசுலாவின் சோசலிஷ தலைவர் ஹுகோ சாவேஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை மரணமடைந்தார். அவரின் இறப்பு அமெரிக்காவின் சதி என்று ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கென்னடி சியுகானவ் கூறியுள்ளார்.

இவர் நேற்று ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

அமெரிக்காவின் கொள்கைகளை விமர்சித்த, அதற்கு எதிராக பலமிக்க கூட்டணியை உருவாக்க நினைத்த 6 லத்தின் அமெரிக்க நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் புற்றுநோய் தாக்கியது? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. என்னைப் பொறுத்தவரை இவை அனைத்தும் தற்செயல் அல்ல. சாவேசின் இறப்பில் மர்மம் உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெனிசுலாவின் துணை அதிபர் நிகோலஸ் மதுரோ கூறும்போது, நமது நாட்டின் நீண்டகால எதிரிகள், சாவேஸின் உடல் நிலைக்கு தீங்கு விளைவிக்க வழிகளை தேடினர். சாவேஸ் ஏகாதிபத்தியத்தின் சதிக்கு பலியாகி விட்டார்.' என்று கூறினார்.

2007-ம் ஆண்டு வெளியான சி.ஐ.ஏ.வின் ரகசிய ஆவணங்களில் பிடல் காஸ்ட்ரோவை கொல்ல அமெரிக்கா பலமுறை முயற்சித்தது தெரிய வந்தது.

பிடல் காஸ்ட்ரோ ஒருமுறை 'நீ மிகவும் கவனக்குறைவாக இருக்கிறாய். அவர்கள் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அடைந்துள்ளனர். நீ என்ன சாப்பிடுகிறாய், அவர்கள் உனக்கு என்ன சாப்பிட கொடுக்கிறார்கள், என்ன ஊசி போடுகிறார்கள் என்பதில் கவனமாய் இரு என தன்னிடம் கூறியதாக சாவேஸ் தன்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் கொள்கைகளை விமர்சித்த பிரேசில் அதிபர் டில்மா ரோஸ்செப், பராகுவே நாட்டின் பெர்னாண்டோ லூகோ, பிரேசிலின் முன்னாள் தலைவர் லூயிஸ் இனசியோ லுலாடா சில்வா, அர்ஜெண்டினாவின் அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் ஆகியோர் உள்ளிட்ட 6 லத்தின் அமெரிக்க நாடுகளின் தலைவர்களுக்கு புற்றுநோய் தாக்கி இருப்பதாக கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக