வியாழன், 21 மார்ச், 2013

தமிழ்க் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் 8 அகவைச் சிறுமி

தமிழ் க் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் 8  அகவைச்  சிறுமி
தமிழ் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் 8 வயது சிறுமி

சென்னை, மார்ச் 21-
 
சென்னையச் சேர்ந்தவர் வினோத். இவரின் 8 வயது மகள் சைத்தன்யா. இந்தச் சிறுமி தி. நகரில் உள்ள வித்யோதயா மெட்ரிகுலேசன் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.
 
குழந்தைகளுக்கு மொழிப்பயிற்சிக்காக, மொழிபெயர்ப்பு பயிற்சிகள் வழங்கப்படும். இதுபோன்ற மொழிபெயர்ப்புப் பயிற்சியை 8 மாதங்களாக மேற்கொண்டு வந்தார்.
 
சிறுமி சைத்தன்யா பிரபல தமிழ் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய 'கால் முளைத்த கதைகள்' என்ற சிறுகதைத் தொகுப்பை படித்தார். மொழிப்பயிற்சியின் காரணமாக, அவர் படிக்கும் கதைகளை விளையாட்டுத் தனமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க தொடங்கினர். இதனை கவனித்த அப்பா அவரை ஊக்கப்படுத்தினர். மேலும் சைத்தன்யாவுக்கு ஆங்கிலம், தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகள் தெரியும்.
 
இதுகுறித்து சைத்தன்யா கூறியதாவது:-
 
எனக்கு மொழிபெயர்ப்பு என்றால் என்னவென்று தெரியாது. நான் தமிழில் படிக்கும் கதைகளை ஆங்கிலத்தில் எழுதுகிறேன். எல்லாம் குட்டிக்கதைகள். அதனால், கதைகளை  ஆங்கிலத்தில் எழுதுவது கஷ்டமாக இல்லை.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
சிறுமி கடந்த மாதம் குழந்தைகளுக்காக எஸ். ராமகிருஷ்ணனின் எழுதிய 80 சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ' நத்திங் பட் வாட்டர்' என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.
 
இது குறித்து எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் கூறியதாவது:-
 
எனது கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பை முதலில் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு சிறுமி இந்த மொழிபெயர்ப்பை செய்துள்ளது என்னை மிகவும் ஈர்த்தது. இது குழந்தைகளுக்கான கதைகள். ஒரு குழந்தையின் எளிமையாக கதை சொல்லும்  பாணியை இந்த மொழிபெயர்ப்பில் பார்த்தேன்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக