வியாழன், 21 மார்ச், 2013

முனைவர் பட்டம் பெற்று 71 அகவை மூதாட்டி அருந்திறல்






முனைவர் பட்டம் பெற்று 71  அகவை மூதாட்டி 
அருந்திறல்


புதுதில்லி: டில்லி பல்கலைக்கழகத்தில், 71 வயதான பெண், முனைவர் (டாக்டர்) பட்டம் பெற்று, சாதனை படைத்துள்ளார். இவர், சிந்தி மொழி பாடப்பிரிவில் ஆய்வு மேற்கொண்டதற்காக, ஜனாதிபதியிடம் பட்டம் பெற்றுள்ளார்.டில்லியை சேர்ந்தவர், உஷா சாஸ்வத்,71, பள்ளி ஆசிரியையாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். பணி ஓய்வுக்கு பின், சிந்தி இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு, பல ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதினார். இதன் காரணமாக, சி.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய பள்ளி கல்வி வாரிய பாடத் திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரையிலான, சிந்தி மொழி இலக்கண பாடத் திட்டத்தை வடிவமைக்கும் பொறுப்பு, இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.மேலும், 2007ம் ஆண்டு, டில்லி பல்கலையின், சிந்தி துறையில், ஆராய்ச்சி மாணவியாக தன்னை இணைத்து கொண்ட இவர், கடந்த ஆண்டு, ஆய்வை நிறைவு செய்தார். டில்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற, பட்டமளிப்பு விழாவில், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜியிடமிருந்து, உஷா சாஸ்வத், முனைவர் பட்டம் பெற்றார்.அப்போது பேசிய உஷா, ""என் கல்வி தாகம் இனிமேலும் அடங்காது; மேலும் படிக்க உள்ளேன்,'' எனக் கூறி, அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்க வைத்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக