ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

நாக்கில் முதல்வர் படம் வரைந்த ஓவிய ஆசிரியர்

நாக்கில் முதல்வர் படம் வரைந்து நன்றி செலுத்திய ஓவிய ஆசிரியர்

விழுப்புரம் : நாக்கில் முதல்வர் ஜெ., படத்தை வரைந்து ஓவிய ஆசிரியர் ஒருவர், முதல்வருக்கு நன்றி செலுத்தி வியப்பில் ஆழ்த்தினார். விழுப்புரம் மாவட்டம், மணலூர்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வம், 33; ஓவியர். இவர், சிவனார்தாங்கல் அரசு பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக உள்ளார்.

கண்ணாடியைப் பார்த்தபடி :


விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த செல்வம், மக்கள் முன்னிலையில் நாக்கில் ஓவியம் வரைந்து வியப்பை ஏற்படுத்தினார்.கலைத்திறனை ஊக்கப்படுத்தும் வகையில் தங்களுக்கு ஆசிரியர் பணி வழங்கிய, முதல்வர் ஜெ.,விற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், அவரது பிறந்த நாளையொட்டியும், முதல்வரின் படத்தை நாக்கில் வரைந்து காட்டியதாக கூறினார். நாக்கை நீட்டியபடி, அதில் தூரிகையால் வாட்டர் கலர் மூலம் முதல்வரின் உருவப்படத்தை வரைந்து அசத்தினார். 10 நிமிடங்கள் எடுத்துக்கொண்ட அவர், கண்ணாடியைப் பார்த்தபடி முதல்வர் ஜெ., உருவத்தை நாக்கில் வரைந்து காட்டினார்.
நாக்கில் படம் வரைந்த, ஓவியர் செல்வம், ஏற்கனவே இதே போன்று பாரதியார், அப்துல்கலாம் உள்ளிட்டோரின் படங்களை வரைந்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார். தன் ஓவிய கலைத்திறனுக்கு அங்கீகாரம் அளித்ததோடு, வேலை வாய்ப்பையும் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி செலுத்தும் விதத்தில், முதல்வர் பிறந்த நாளையொட்டி, அவரது ஓவியம் வரைந்து காட்டியதாக ஓவியர் பெருமிதப்பட்டார். நாக்கில் ஓவியம் வரைந்த செல்வத்திற்கு, அங்கிருந்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


1 கருத்து:

  1. ஓவிய ஆசிரியருக்கு அனைத்து பகுதிநேரச் சிறப்பாசிரியர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

    இவண்,
    செயலாளர்,APSTA,Nagapattinam Dist.
    www.ssaptst.blogspot.in

    பதிலளிநீக்கு