சனி, 2 பிப்ரவரி, 2013

வாழைப்பழ அளவில் தேங்காய் : "தானே' புயலால் தொடரும் சோகம்


வாழைப்பழ  அளவில்  தேங்காய் : "தானே' புயலால் தொடரும் சோகம்

பரங்கிப்பேட்டை: "தானே' புயல் பாதிப்பால் தேங்காய், மெலிந்து வாழைப்பழம், "சைசில்' நீண்டு உள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த பல ஆண்டு பலன் தரக்கூடிய தென்னை, மா, பலா, முந்திரி உள்ளிட்ட மரங்கள், "தானே' புயல் கோரத்தாண்டவத்தில் சின்னாபின்னாமானது. வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள், அரசு வழங்கிய நிவாரணத்தை கொண்டு, புயலில் தப்பிய மரங்களை பராமரிக்க துவங்கியுள்ளனர். இருப்பினும், புயலில் தப்பிய தென்னை மரங்களில், தேங்காய் காய்ப்பு குறைவாகவே உள்ளது. பரங்கிப்பேட்டை அடுத்த பெரியகுமட்டி கிராமத்தில், தானே புயலில் தப்பிய தென்னை மரங்களில், காய்க்கும் தேங்காய்கள் ,திறட்சி இல்லாமல், மெலிந்து வாழைப்பழம் அளவில் உள்ளது. மட்டைகள் எப்போதும்போல் பெரியளவில் உள்ளது. ஆனால் இளநீரில் ஒரளவு தண்ணீர் இருந்தாலும் முன்பு போல இல்லை. அவை முற்றிய பின் பருப்பின் அடர்த்தி குன்றி, தண்ணீரின்றி, மெலிந்து கொப்பரையாக மாறி விடுகிறது. இதனால், தென்னை மரங்களை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு, தரமான தேங்காய் விளைச்சலுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக