செவ்வாய், 8 ஜனவரி, 2013

தமிழகம் மின்சாரம் பெற சத்தீசுகரில் அனல் மின்நிலையம்

தமிழகம் மின்சாரம் பெற சத்தீசுகரில் அனல் மின்நிலையம்

First Published : 08 January 2013 02:24 AM IST
தமிழகத்துக்கு மின்சாரம் பெறுவதற்காக சத்தீஸ்கரில் அனல் மின்நிலையம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 இதற்காக சத்தீஸ்கர் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், அந்த மாநில முதல்வர் ரமண் சிங்கை ராய்ப்பூரில் திங்கள்கிழமை சந்தித்தார்.
 சத்தீஸ்கரில் அனல் மின்நிலையம் அமைக்க தமிழகம் ஆர்வமாக உள்ளது என்ற தகவலை நந்தம் விஸ்வநாதன், ரமண் சிங்கிடம் தெரிவித்தார். இத்தகவலை சத்தீஸ்கர் மாநில அரசு தெரிவித்துள்ளது.
 சத்தீஸ்கர் அரசின் கொள்கைப்படி, உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 30 சதவீதத்தை சத்தீஸ்கரே வாங்கிக் கொள்ள முன்னுரிமை அளிக்கப்படும். 7.5 சதவீத மின்சாரம் மட்டும் மாறுபட்ட கட்டணங்களில் விற்கப்படும் என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தமிழக மின் தேவைக்காக சத்தீஸ்கரில் அனல் மின் நிலையம் அமைப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் ரமண் சிங்குக்கு தமிழக அமைச்சர் அழைப்பு விடுத்தார்.
 இதற்கு ரமண் சிங் என்ன பதிலளித்தார் என்பது குறித்த விவரத்தை சத்தீஸ்கர் மாநில அரசு வெளியிடவில்லை.
  "தமிழக மின்சார வாரியமும், மகாராஷ்டிர மாநில தாது வள நிறுவனமும் இணைந்து நடத்தும் நிறுவனத்துக்கு சத்தீஸ்கரில் நிலக்கரி எடுப்பதற்காக மத்திய அரசு நிலக்கரி வயலை 2006ஆம் ஆண்டில் ஒதுக்கீடு செய்துள்ளது' என்று இந்த சந்திப்பின்போது ரமண் சிங் கூறியுள்ளார்.
 இரு மாநில மின்துறை உயரதிகாரிகள் பலரும் இந்த சந்திப்பின் போது உடனிருந்தனர். தமிழகத்தில் இப்போது 4 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்சாரப் பற்றாக்குறை நிலவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக