சனி, 2 ஜனவரி, 2010

புதிய தசாப்தம் பிறக்கிறது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிக்கை

01 January, 2010 by admin


புதிய தசாப்தம் பிறக்கிறது! தமிழர் உரிமைப்போர் புதிய வடிவம் எடுக்கிறது!! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாகிறது!!! புதியதொரு வருடமும் புதியதொரு தசாப்தமும் 2010 இல் பிறக்கின்றன.
கடந்த தசாப்தங்களில் சிறிலங்கா அரசின் இனஅழிப்பு யுத்தத்தினால் ஏற்பட்ட,வார்த்தைகளால் வடிக்க முடியாத இழப்புக்களையும் துயரையும் கடந்து உலகமெங்கும் வாழும் தமிழ்மக்கள் புதியதொரு தசாப்தத்தில் காலடி வைக்கின்றனர்.

2000 ஆம் ஆண்டில் கடந்த தசாப்தம் ஆரம்பித்த போது தமிழ் மக்கள் அதை சமாதானம் குறித்த நம்பிக்கையுடன் தான் எதிர்கொண்டனர். தமிழ் மக்களின் நியாயத்துடன்கூடிய சமாதானம் குறித்த நம்பிக்கை அடுத்த சில ஆண்டுகளிலேயே கருகிப் போனது. 2009 ஆம் ஆண்டில் தமிழர் தேசத்தின் வரலாற்றில் ஒருபோதும் எதிர்கொள்ளாத அளவு கொடூரங்களை சிங்கள அரசின் கொடிய கரங்களால் நாம் எதிர்கொண்டோம்.

தற்போது புதிய தசாப்தத்தில் காலடி வைக்கும் இவ்வேளையில் இனிவரப்போகும் ஆண்டுகளை புதிய நம்பிக்கையோடு நாம் எதிர்கொள்வோம். 2010 இல் ஆரம்பமாகும் இப்புதிய தசாப்தத்தின்போது தமிழ் மக்கள் தமக்குரித்தான உரிமைகளை அனைத்து வகையான சனநாயக வழிமுறைகளூடாகவும் வென்றெடுக்கவென மீளவும் உயிர்த்தெழுவார்களென்பதில் ஐயமெதுவுமில்லை. சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை உருவாக்கும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையின்பின் நாமெல்லாம் ஒருமித்து நிற்கின்றோம்.

இதேவேளையில், இவ் அரசியல் அபிலாசைக்காக குரல் கொடுப்பதற்கோ அல்லது செயற்படுவதற்கோ தற்போது சிறீலங்காவில் எவ்வித அரசியல் வெளிகளுமேயில்லை என்பதை நாமறிவோம். அதனாற் தான், நாம் இவ் வருடம் அமைக்கத் திட்டமிட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர் தமது சுயநிர்ணய உரிமையை நிறுவவும் தமக்கேயுரித்தான இறைமையை நிலைநாட்டுவதற்குமான அரசியல் வெளியை இலங்கைத்தீவில் உருவாக்க உழைக்குமென்பதையும் நாம் திடமாக நம்புகிறோம்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் 2007 ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் குறிப்பிட்டவாறு - நமது தேசத்தை மீள்நிர்மாணம் செய்யும் முயற்சியில் நமது தேசத்தின் அறிவு, பொருள் மற்றும் நிதிசார் அனைத்து வளங்களையும் தேசத்தின் சேவைக்காக ஒருங்கிணைக்கும் வகையில் நம்முடன் அணிதிரளுமாறும் புதிய தசாப்தத்தில் நமது விடுதலைப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்த எம்முடன்
கைகோர்த்து நிற்குமாறும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு நாம் அறைகூவல் விடுக்கின்றோம். உங்கள் அனைவரிதும் ஆதரவுடனும் பங்களிப்புடனும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது தமிழரினது அதிகார மையமாக வலுப்பெறும்.

அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்களுடன் உரிய முறையில் தொடர்புகளைப் பேணி, யுத்தத்தினால் இடம்பெயர்க்கப்பட்ட நமது மக்களது வாழ்வை மீள் நிர்மாணம் செய்ய உழைப்பதே நமது உடனடி இலக்காகும். யுத்தத்தின்போது நமது மக்கள் மீது இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள், மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனஅழிப்பு போன்றவைக்கெதிராக நீதி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் நாம் உறுதியாக நம்புகிறோம. வகைகூறும்நிலையென்பது நிலையான சமாதானத்தின் இன்றியமையாத ஒரு அம்சமாகும். அதுபோலவே அனைத்துலக சமூகத்தின் செயலறுநிலை பன்னாட்டு அமைப்புகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவதோடு சட்டங்களுக்கமைந்த ஆட்சி என்ற கோட்பாட்டினையும் கேலிக்குரியதாக்கிவிடும்.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான மதியுரைக்குழுவின் அறிக்கையினை வெளியிட இருக்கிறோமென்பதனை இத் தருணத்தில் மகிழ்வுடன் அறியத் தருகிறோம். வெளியீட்டினைத் தொடர்ந்து ஒரு குறுகிய காலத்துக்கு இவ்வறிக்கை மக்கள் மத்தியிலான கருத்துப்பரிமாற்றங்களுக்கு உட்படுத்தப்படும்.

2007 ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் தேசியத் தலைவர் அவர்கள் இந்தப் பிரபஞ்சம், மானிட முயற்சிகள, அனைத்துலக உறவுகள் எல்லாமே தர்மத்தின் சக்கரத்தில் சுழலும் காலம் என்றோ வரும் எனக் கூறியிருந்தார். கலாநிதி மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் வார்த்தைகளில் இதனைக் கூறுவதாயின் 'தர்மத்தின் அடிப்படையிலமைந்த பிரபஞ்சத்தின் அச்சு நீளமானதென்றாலும் அது நீதியின் பக்கமே வளையும்'.

தெற்காசியாவின் மாறிவரும் புவிசார் அரசியல் சூழலையும் கவனத்திற்கொண்டு தமிழீழ மக்களுக்கு நியாயம் கிடைத்திட நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலக சமூகத்தின் மத்தியில் முனைப்புடன் செயற்படும். புதிய ஆண்டிலும் அதற்கப்பாலும் நாம் நமது விடுதலைப் பயணத்தில் முன்னேறிச் சென்றிடுவோம் என்ற நம்பிக்கையோடு நாடு கடந்த தமிழீழ அரசாங்க முயற்சியின் இணைப்பாளர்
என்றவகையில் தமிழரனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.


இவண்,

விசுவநாதன் ருத்ரகுமாரன்
இணைப்பாளர்,
நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழு



Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 5466
மர்மமான முறையில் கணவன் மனைவி படுகொலை :திடுக்கிடும் தகவல்

01 January, 2010 by admin



தற்போது மீள் குடியேறியுள்ள குடும்பங்களை சோதித்துப் பார்ப்பதற்கும், இதுபோல உண்மையாகவே காட்டில் மறைந்திருக்கும் சில விடுதலை புலிகள் உணவு கேட்டு வந்தால் இவர்கள் எவ்வாறு நடந்துகொள்வார்கள் எனப் பரிசோதிக்கவே இவ்வாறு இராணுவத்தினர் நடந்துகொண்டதாக அங்கிருந்த சிலர் தெரிவிக்கின்றனர். அத்துடன் உண்மையாகவே விடுதலைப் புலிகள் வந்து உணவு கேட்டால் கூடக் கொடுப்பதற்கு இனி மக்கள் அஞ்சுவார்கள் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

சுமார் 3 நாட்களுக்கு முன்னர் இக் குடும்பம் கொலைசெய்யப்படதாகக் கூறப்படுகிற போதும் இதனைச் சுயாதீனமாக எம்மால் உறுதி செய்யமுடியவில்லை. அதிலும் இவ் விடையம் குறித்து மக்கள் மேலும் கருத்துக்களைத் தெரிவிக்க மறுக்கின்றனர். மீள் குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் இவ்வாறான பல அசம்பாவிதங்கள் நடைபெறுகின்ற போதிலும் இதுவரை எதுவும் வெளிவராத நிலையிலேயே உள்ளது என்பது குற்பிடத்தக்க விடையமாகும்.

இவ்வாறன செயல்கள் மூலம் ஒரு உளவியல் போரைத் தொடுத்து, மீள் குடியேறிய மக்களை அச்சுறுத்தி தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க இலங்கை இராணுவம் பகிரங்கமாக முயல்வது தெரிகின்றது.

புலம்பெயர் மக்களின் உறவினர்கள் யாராவது இது குறித்து அறிந்திருந்தால் எமது இணையத்துடன் தொடர்புகொள்ளவும். கொல்லப்பட்டதாகக் கூறப்படும் கணவன் மனைவி, யார் என்பது பற்றியோ அல்லது அவர்கள் பெயர்விபரங்களோ இன்னும் சரிவரக் கிடைக்கப்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 21384
இலங்கைத் தமிழர் பிரச்னை தமிழகக் கட்சி அரசியலா?



இலங்கையில் நடந்து முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறப்படும் போர், இரண்டு நாடுகளுக்கிடையில் நடந்த போர் அல்ல. முழுக்குடியுரிமை பெற்ற தமிழ்மொழி பேசும் மக்களுக்கு எதிராக, பல நாட்டுப் படை, போர்க்கருவிகள், அரசியல், நிதியுதவியுடன், அரசு அதிகாரத்தை கையில் வைத்துள்ள இலங்கை அரசு நடத்திய கொடூரமான போர் என்பதை - மீண்டும் நினைவுறுத்தும் அவசியம் எழுந்துள்ளது. 2009-மே மாதத்தில் தமிழ்ப் போராளிகளை முற்றாக அழித்து ஒழித்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அதன் மகிழ்ச்சிக்காக விழாவையும் கொண்டாடிக் கொண்டது. இந்திய அரசும் இதைப் பாராட்டி, போரினால் ஏற்பட்ட சேதங்களை ஈடுசெய்து கொள்ள நிதியுதவி செய்வதாக அறிவித்தது. தொடர்ந்தும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் சித்திரவதைக் கூடங்களில் சிக்குண்டு கிடக்கிறார்கள். இந்தக் காலத்தில்தான், தமிழக முதல்வர் கருணாநிதி, நம் மெüனம் யாருக்குத் தெரியப் போகிறது என்ற தலைப்பிட்டு, கட்டுரையை எழுதி வெளியிட்டிருந்தார். அதில் ""நான் யார் மீதும் குற்றம், குறை சொல்வதற்காக இதையெல்லாம் எழுதவில்லை'' என்று எழுதியுள்ளார். நானும் அவரிடம் குற்றம் காணவோ, அவர் மீது குறை கூறவோ இதை இங்கு குறிப்பிடவில்லை. ஆனாலும் இதனை ஆராய்ந்து கவனிக்க வேண்டிய அவசியம் நமக்கு எழுந்துள்ளது.தமிழர்களின் உயர்வுக்காகப் பாடுபட வேண்டியவர்கள் தங்கள் உயிரை அற்ப ஆயுளில் முடித்துக் கொண்டு போய்விட்டார்களே, என்ற ஆதங்கத்தில்தான் எழுதுகிறேன். ""வாழவேண்டிய ஆயிரக்கணக்கான இளந்தளிர்கள் வாடி வதங்கி விட்டார்களே என்ற வேதனையில் எழுதுகிறேன்'' என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.நம்முடைய பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாகக் கணிக்காத காரணத்தால், நம்முடைய தமிழ்மக்கள் எத்தனை பேர் மாற்றாரின் தாக்குதலுக்கு ஆளாகித் தங்கள் உயிரை இழக்க நேரிட்டது? ரணில் கூறியிருப்பதைக் கூர்ந்து, விடுதலைப்புலிகள் போர்த் தந்திரத்தை எதிர்காலக் கணிப்போடு கடைப்பிடிக்காதது தான் காரணம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும் என்றும் கருணாநிதி எழுதியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் மட்டும் நடந்த போராக மட்டும் கருணாநிதி இதைக் கூறுகிறார். இந்தியப் பேரரசும் இலங்கைப் போரில் பங்கெடுத்தது. இந்த உண்மையை யாராலும் மறைக்க முடியுமா? தமிழக முதல்வர் இலங்கைத் தமிழர்களின் பிரச்னைக்காக 1956 முதல் ஈழத் தந்தை செல்வாவின் குரலோடு இணைந்து போராடியதையும் பதிவு செய்து, அன்று முதல் இன்று வரை தனது கட்சி நடத்திய போராட்டங்கள், சட்டமன்றப் பதவிகளைத் துறந்தது, இருமுறை ஆட்சியை இழந்தது, தி.மு.க திரட்டிய நிதி, அது மதிக்கப்படாதது, மதுரையில் பழ.நெடுமாறனால் கூட்டப்பட்ட டெசோ மாநாடு, இந்தியா திரும்பிய அமைதிப்படையை வரவேற்க மறுத்தது என நீண்ட பட்டியலையும் வெளியிட்டுள்ளார். ஜனநாயக ரீதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு வாசற்படி வந்த போதுகூட, அதை எட்டி உதைத்து விட்ட தவறான காரியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு ரணில் விக்கிரமசிங்க தந்த பேட்டியையும் ஆதாரம் காட்டியுள்ளார். இதற்குப் பின் இவர் குறிப்பிட்டுச் சொல்வதுதான் மிகவும் முக்கியமானதாகும். என்னையும், தம்பி மாறனையும் 1989-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி தில்லிக்கு அழைத்து - விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றியும், ஈழப்பிரச்னை குறித்தும், இரண்டு நாள் உரையாடி - அது பற்றிய விவரங்களை சுமார் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தமிழ்நாடு மாளிகையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நட்வர்சிங் மூலமாக எங்களுக்குத் தெரிவித்து - நீங்களும், மாறனும், வைகோவும் இலங்கை சென்று கொழும்பிலோ அல்லது உங்களுக்கு விருப்பமான இடத்திலோ முகாமிட்டு, பிரபாகரனுடன் இந்தப் பிரச்னை குறித்து விரிவாகப் பேசுங்கள். எத்தனை நாள் வேண்டுமானாலும் அதற்காக நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். இலங்கையில் நீங்கள் அவர்களைச் சந்திக்கவோ, அல்லது அவர்கள் நீங்கள் தங்கியிருக்கும் இடத்துக்கு வந்து சந்திக்கவோ தேவையான ஏற்பாடுகளை இங்கிருந்து செய்து தருகிறேன்.அதிகபட்சம் அவர்களது கோரிக்கை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள் - இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகளை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன். என்று கூறி உறுதியளித்த அந்த இளந்தலைவர் ராஜீவ் காந்தி, இந்திய மண்ணில், அதுவும் தமிழ் மண்ணிலேயே கொலையுண்டார் என்பது ஒரு மாபெரும் சோகச் சம்பவம். இதனால், ஈழ விடுதலைப் போராட்டத்தீயில் தண்ணீர் விட்டு அணைத்தது போல் ஆயிற்று என்றும் எழுதியுள்ளார். அந்தப் படுகொலைக்குப் பின்னர் பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைவித்தால் சங்காரம் நிஜம் என்று சங்கே முழங்கு என பொங்கியெழுந்த ஆதரவு வெள்ளம் வற்றிய ஓடையாகியது என்பதும் உண்மை தான்.நம்முடைய கேள்வி என்னவென்றால் இன்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ள இந்த முக்கியத் தகவல்கள், இதற்கு முன்னர், இவரால் தமிழக மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டதா என்பதுதான். பிரதமர் ராஜீவ் காந்தி, கருணாநிதியுடனும் முரசொலி மாறனுடனும் தில்லியில், பேசியது 1989-ம் ஆண்டில். ù காலையுண்டது 1991 மே 21-ம் நாளன்று. கொல்லப்பட்ட போது இவர் முன்னாள் பிரதமர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மட்டும்தான். 1989-க்கும் 1991,மே மாதத்துக்கும் இடையிலான காலத்தில், ராஜீவ் காந்தி கேட்டுக் கொண்டபடி, கருணாநிதி பிரபாகரனைச் சந்தித்தாரா? ராஜீவ் காந்தி உறுதியளித்த உதவி பற்றி பிரபாகரனுக்குக் கூறப்பட்டதா? இந்தியப் பேரரசு உதவிக்கரம் நீட்டியதை பிரபாகரன் உதறித் தள்ளினாரா? தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மைச் செய்திகளைக் கூறி விளக்கம் தர வேண்டிய அவசியம் கருணாநிதிக்கு இருக்கிறது.ஏனெனில், 1989 பிப்ரவரியில் தில்லியில் பிரதமர் ராஜீவ் காந்தி, முதல்வர் கருணாநிதியை அழைத்துப் பேசியபோது உடனிருந்தவர் முரசொலி மாறன் மட்டுமே. உறுதிமொழி தந்த ராஜீவ் காந்தியும் இப்போது இல்லை, உடனிருந்து கேட்ட மாறனும் இல்லை. எனவே, தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையைக் கூற, ஒரே ஒருவர் மட்டும் தான் உள்ளார். அவர் தான் கருணாநிதி. ராஜீவ் காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர்களாக இருந்த பெரியவர் மூப்பனாரிடமோ, வாழப்பாடி ராமமூர்த்தியிடமோ இந்தப் பணியை ஒப்படைக்காமல், கருணாநிதியை அழைத்துச் சொன்னது ஏன்? இவர் கூறினால் தான் பிரபாகரனும், போராளிகளும் கேட்பார்கள் என்ற நம்பிக்கையில் தான். இந்தப் பணி நிறைவேற்றப்பட்டதா? கிடைத்த பதில் ராஜீவ் காந்திக்குத் தெரிவிக்கப்பட்டதா? இவை எல்லாம் இதில் தொடரும் கேள்விகள். 1989 முதல் 1991 மே வரை இந்தச் செய்தியைத் தமிழ் மக்களுக்கு ஏன் தெரிவிக்காமல், அதன் பிறகும் 2009 வரை இது குறித்து மெüனமாக இருந்து இன்று முரசொலியில் கடிதம் ஏன் எழுத வேண்டும்? ராஜீவ் காந்தி கருணாநிதியிடம் தந்த வாக்குறுதி, பிரபாகரனை எட்டியதாகவும் தெரியவில்லை. பிரபாகரன், ராஜீவ் காந்தி தந்த வாக்குறுதியை நம்பவும் இல்லை, ஏற்கவும் இல்லை இதில் வேறு சந்தேகம் கலைஞருக்கு இருக்கிறது என்றால், 1991-ல் அமைந்த, தி.மு.க. ஆதரவு வி.பி.சிங் அரசிடம் அதைக் கூறி, ராஜீவ் காந்திக்குப் பாதுகாப்பு ஏற்பாட்டை இவர் செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. ஆனால் ராஜீவ் காந்தி படுகொலை தான் நடந்தது. இன்னொரு முக்கிய அரசியல் விளக்கத்தையும் தர வேண்டுகிறேன். 1956 முதல் தந்தை செல்வாவின் குரலோடு சேர்ந்து முழங்கத் தொடங்கிய அந்த இனச்சிக்கல் 2009 வரை தீர்க்கப்படவே இல்லை. இதற்கு யார் காரணம் விடுதலைப்புலிகள் இயக்கம் தொடங்கப்படுவதற்கு முன்பே இலங்கைத் தமிழ் மக்கள் அகதிகளாகி, புலம் பெயர்ந்து ஓடுவது தொடங்கி விட்டது.இந்திய அரசு, தொடக்க காலத்தில், இலங்கைத் தமிழர்களுக்கு இடம் தந்து உதவியது. இலங்கை அரசைக் கண்டித்தது. தீர்வு காண வற்புறுத்தியது. 1956-ம் ஆண்டிலேயே கருணாநிதி தி.மு.க. வின் முன்னணித் தலைவர்களில் ஒருவர். அவர் தான் இன்று ஆட்சிக்கும் தலைவர். கட்சிக்கும் தலைவர். பா.ஜ.க.வுடனும் தி.மு.க. கூட்டாட்சி நடத்தியது. காங்கிரசுடனும் கூட்டாட்சி நடத்துகிறது. கடந்த 15 ஆண்டுகளாக மத்திய கூட்டாட்சியில் பங்கேற்று வருகிறது. தி.மு.க. மத்திய ஆட்சியில் பங்கு பெறாமல் இருந்த போது, காங்கிரஸ் ஆட்சி, இலங்கைத் தமிழர்க்கு ஆதரவு நிலையை எடுத்தது. ஆனால், தி.மு.க. மத்திய மந்திரி சபையில் சேர்ந்த பின்னர், மத்திய காங்கிரஸ் ஆட்சி இலங்கை அரசுக்கு ஆதரவு நிலையையும், போராளிகளை ஒழிக்க ஆயுத உதவி செய்வதும் ஏன்? இந்தக் கொள்கை நிலை - மாற்றத்துக்குக் காரணம் என்ன?÷விடுதலைப்புலிகள் தந்த ஆலோசனைகளையும், உதவிகளையும் நிராகரித்தனர் எனக் குறை சொல்லப்படுகிறது. இருக்கலாம். ஆனால், தி.மு.க. பங்கேற்றுள்ள மத்திய அரசு, தமிழ்நாட்டிலுள்ள அத்தனை கட்சிகளும் முதலமைச்சர் தலைமையில் கூடி நிறைவேற்றிய தீர்மானம், சட்டசபைத் தீர்மானம். பிரதமரை நேரில் சந்தித்துத் தந்த வேண்டுகோள் - ஆகியவை பயனற்று குப்பைக் கூடை காகிதமாகிவிட்டதே ஏன்? அது பற்றிய சுய விமர்சனம் இல்லாமல், போராளிகள் தவறாக மதிப்பிட்டுச் செயல்பட்டதை மட்டும் பட்டிலிட்டுள்ளது ஏன்? 1990 முதல் 1996 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததாலும், 1991 மே மாதம் 21-ம் நாளன்று ராஜீவ் காந்தி வெடிகுண்டுக்கு ஆளான போது அதே இடத்தில் நானும் ரத்தம் சிந்தியவன் என்பதாலும், தமிழ் மக்களை மிகவும் நேசித்தவர், அவர்களது உரிமைகளை ஈட்டித்தர உறுதியுடன் முயன்றவர் ராஜீவ் காந்தி என்பதைத் தெரிந்தவன் நான். அவர் மீது சுமத்தப்பட்டுவரும் களங்கத்தைத் துடைக்க வேண்டியோர் துடைக்கவில்லை. அவருடைய இந்த உள்ளுணர்வைத் தெரிவிக்க விரும்புகிறேன். ÷நானறிந்த வரையில், இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களுக்கு எல்லாம் பல காரணங்கள் உண்டு. தமிழகத்தின் அரசியல் கட்சிகள் குழப்பியதும் காரணமாகும். ஆனால் இலங்கைத் தமிழர்கள் தன்னம்பிக்கையை இன்னமும் இழக்கவில்லை, இலங்கைத் தமிழரின் அரசியல் மனித உரிமைகளை மீட்டு நிலை நாட்டப்பட வேண்டுமெனில், இலங்கை ஒரு ஜனநாயக நாடு அல்ல என்பதை நாம் உணர வேண்டும். அது நட்புக்குரிய நாடு அல்ல என்பதை இந்தியா உணர வேண்டும்.இலங்கைத் தமிழர்களே அவர்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். இறுதி அரசியல் தீர்வு இலங்கைத் தமிழர்களால் ஏற்கப்படதக்கதாக அமைய வேண்டும். இதைத் தவிர்த்து தமிழக அரசியலுக்காக இலங்கைத் தமிழர்களின் உயிரைப் பணயம் வைத்து விளையாடுவ தை நிறுத்திக் கொள்ள வேண்டும். இறுதியில் அறம் வெல்லும், நம்புவோம்.
கருத்துக்கள்

தடம் புரண்ட தா.பா. இப்போது சரியான பாதையில் செல்கிறார். எனவே,மிகச் சரியாக வினாக்களைத் தொடுத்து இக் கட்டுரையைப் படைத்துள்ளார். தடம்புரண்டுள்ள பிறரும் மீண்டும் சரியான பாதைக்குத் திரும்ப வேண்டும். இனப் போராகவோ உள்நாட்டுப் போராகவோ கருதாமல் தமிழினத்தின் மீது இந்தியா உள்பட பல நாடுகள் நடத்திய வஞ்சகப் படுகொலையாகக் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-இந்தியநட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/2/2010 7:00:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
நாற்காலிகளுக்காகப் பாடும் அவல நிலை: தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்



சென்னை, ஜன. 1: நாற்காலிகளுக்காகப் பாடும் அவல நிலை மாற வேண்டும் என்று "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் கூறினார்.சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "அபூர்வ ராகம்' இசை, நாட்டிய மாத இதழின் 8}வது ஆண்டு விழாவில் 8 இசைக் கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி அவர் பேசியதாவது:பத்திரிகை நடத்துவது எவ்வளவு கடினமானது என்பது ஒரு நாளிதழின் ஆசிரியர் என்ற முறையில் நான் நன்கறிவேன். ஜனரஞ்சக பத்திரிகை நடத்துவதே கடினம் என்றால் சிறு பத்திரிகை நடத்துவது பற்றி சொல்லத் தேவையில்லை.பிறகு ஏன் சிறு பத்திரிகை நடத்த வேண்டும் என்று கேட்பீர்கள். ஒரு தாய் ஏன் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள் என்று கேட்டால் அதற்கு பதில் இருக்கிறதா? அதுபோலத்தான் இதுவும்.தன்னுடைய எழுத்தை தான் விரும்பியதுபோல அச்சில் பார்க்க வேண்டும் என்கிற உள் உணர்வின் வெளிப்பாடு அது. இது எல்லா கலைஞர்களுக்கும் உண்டு.இசை விமர்சனங்களுக்காக பல்வேறு சபாக்களை வலம் வந்து கொண்டிருக்கிறேன். பல சபாக்களில் கலைஞர்கள் வெறும் நாற்காலிகளை மட்டுமே பார்த்துக் கொண்டு பாடுகிறார்கள். அதனால் அவர்கள் மனம் சோர்வதில்லை. ஏனெனில் அவர்கள் ஒவ்வொரு நாற்காலியையும் ஒரு ஜீவனாக பார்க்கிறார்கள்.அதுபோலத்தான் எழுத்தாளனும். தன் எழுத்தை அச்சில் பார்க்கும் மகிழ்ச்சிக்காக பத்திரிகை நடத்துகிறான். நல்ல தமிழிசையை தமிழகத்தில் கேட்க முடியவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. பாடல்கள் புரியாததால்தான் பலர் சங்கீதம் அறியாதவர்களாக இருக்கிறார்கள். பாடல்கள் புரிந்தால் அவர்களும் இசையால் ஈர்க்கப்படுவார்கள். அதனால் இசை காப்பாற்றப்படும். நமது கர்நாடக இசை என்பது சிலந்தி வலையைப் போன்றது. அதன் இன்பத்தை அனுபவிக்கத் தொடங்கிவிட்டால் மீண்டுவரவே முடியாது."முதலில் சாகித்யத்தை கற்றுக் கொடுங்கள். பிறகு ஸ்வரங்களை கற்றுக் கொடுங்கள். அப்போது சங்கீதத்தில் தானாக ஈர்ப்பு வந்துவிடும்' என்று 1974}ல் இந்தியன் பைன் ஆர்ட்ஸ் அளித்த விருதை பெற்றுக் கொண்டு செம்மங்குடி சீனிவாச அய்யர் பேசியது எனக்கு நினைவுக்கு வருகிறது.இசை தெரிந்தவர்கள் அதிகமானால் நாற்காலிகளைப் பார்த்து பாடும் அவல நிலை மாறும் என்றார் வைத்தியநாதன்.
கருத்துக்கள்

தலைப்பைப் படித்ததும் அரசியல் வாதிகளின் பதவி நாற்காலி வெறியைக் குறிப்பிடுகிறாரோ என நினைத்தேன். அதற்கும் தலைப்பு பொருந்துகிறது. உயர்நிலை ஒப்பிசை அரங்குகள் தவிர அனைத்து இடங்களிலும் தமிழிசையே ஆட்சி செய்தால் இந்த அவல நிலை மாறும். பிற மொழிகளில் பாடி, பிற மொழிப் பாடல்களுக்கு ஆடி , பிற மொழிகளில் பட்டங்கள் வழங்கிக் கொண்டு தமிழிசையை தமிழ்க்கலையை / தமிழினத்ததைச் சிதைக்கும் இசை அரங்குகளுக்குச் செல்லாதவர்கள் பாராட்டிற்குரியவர்களே! தமிழில் பாடி, தமிழ்ப் பாட்டிற்கு ஆடி, தமிழ் உணர்வுப் படைப்புகளை மையமாகக் கொண்டு கலைகள் வளரட்டும்! வாழ்க தமிழுடன்! வளர்க கலையுடன்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/2/2010 6:13:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
இலங்கைத் தமிழர் பிரச்னை திட்டமிட்டு திசைதிருப்பப்படுகிறது: வைகோ குற்றஞ்சாட்டு



சென்னை, ஜன.1: "இலங்கைத் தமிழர்களின் உண்மையான பிரச்னை மறைக்கப்படுகிறது. இப்போது அவர்களின் பிரச்னை திட்டமிட்டு திசைதிருப்பப்படுகிறது" என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டினார்.இது குறித்து அவர் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:2009-ம் ஆண்டு தமிழர்களின் வரலாற்றில் துயர் மிகுந்த ஆண்டு. இலங்கையில் ஒரு மாபெரும் தமிழினப் பேரழிவு நடத்தப்பட்ட ஆண்டு. இது இந்திய அரசின் துணையோடு, இலங்கை அரசு நடத்திய இன அழிப்பாகும்.இப்போது "முள்வேலி முகாம்களில் உள்ள தமிழர்களை விடுவித்தாலே போதும்; அதோடு தமிழர்களின் பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்' என்பது போல இலங்கை அரசும், இந்திய அரசும் திட்டமிட்டு பிரச்னையை திசைதிருப்புகின்றன.இலங்கையில் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே, அதாவது 1976}ம் ஆண்டிலேயே, "சுதந்திரமான, இறையாண்மை மிக்க தனித் தமிழ் ஈழம்தான்' இலங்கைத் தமிழர்களின் இறுதி இலக்கு என்ற முழக்கம் எழுந்தது.தமிழர்களின் போராட்டத்தை அழித்துவிட்டதாக இலங்கை அரசு புளங்காகிதம் அடைகிறது. ஆனால் தமிழர்களின் தனி ஈழப் போராட்டம் இன்னும் ஓயவில்லை. அது நீறுபூத்த நெருப்பாக உள்ளது. மீண்டும் போராட்டம் வெடிக்கும். நிச்சயம் தமிழ் ஈழம் அமையும்.
கருத்துக்கள்

உடனே ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அல்லது ஈழத்தமிழர் விடுதலை உதவி இயக்கம் என ஒன்றை அமைத்து முதற்கட்டமாக இந்தியாவின் பிற பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டு பிற இனத்தவர், பிற கட்சியினர், பிற மாநிலத்தவர் ஒத்துழைப்புகளையும் பெற்று இந்திய நாட்டைத் தமிழ் ஈழ நட்புறவு நாடாக மாற்றி தமிழ் ஈழ நாட்டைத் தனி அரசாக ஏற்க - அங்கீகரிக்க- நடவடிக்கை எடுங்கள்! உங்களின் சலியா முயற்சி வெல்லட்டும்! தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தலைமையில் அமையும் தமிழ் ஈழக் குடியரசின் குரல் பன்னாட்டு அவையிலும் அனைத்து நாடுகளிலும் ஒலிக்கட்டும்! வாழ்க தமிழ்! வெல்க தமிழ் ஈழம்! வளர்க தமிழ் ஈழ - இந்திய நட்புறவு! வாழ்த்துகளுடன் - புத்தாண்டு வாழ்த்துகளுடன் - முன்னதான தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/2/2010 5:54:00 AM

அன்றும் இன்றும் என்றும் தொடர்கதையாக இந்த அவலம் தொடரத்தான செய்கின்றது. ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் எனப் பெயர் சூட்டக் கூடி விட்டு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் எனப் பெயர் சூட்டியபொழுதே அந்த அமைப்பு சறுக்கத் தொடங்கி விட்டதல்லவா? இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் இலங்கையில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பிற்காகச் செயல்படட்டும்! உடனே ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அல்லது ஈழத்தமிழர் விடுதலை உதவி இயக்கம் என ஒன்றை அமைத்து முதற்கட்டமாக இந்தியாவின் பிற பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டு பிற இனத்தவர், பிற கட்சியினர், பிற மாநிலத்தவர் ஒத்துழைப்புகளையும் பெற்று இந்திய நாட்டைத் தமிழ் ஈழ நட்புறவு நாடாக மாற்றி தமிழ் ஈழ நாட்டைத் தனி அரசாக ஏற்க - அங்கீகரிக்க- நடவடிக்கை எடுங்கள்! உங்களின் சலியா முயற்சி வெல்லட்டும்! தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தலைமையில் அமையும் தமிழ் ஈழக் குடியரசின் குரல் பன்னாட்டு அவையிலும் அனைத்து நாடுகளிலும் ஒலிக்கட்டும்! வாழ்க தமிழ்! வெல்க தமிழ் ஈழம்! வளர்க தமிழ் ஈழ - இந்திய நட்புறவு! வாழ்த்துகளுடன் - புத்தாண்டு வாழ்த்துகளுடன் - முன்னதான தமிழ்ப் பு

By Ilakkuvanar Thiruvalluvan
1/2/2010 5:53:00 AM

THE VAIKO IS THE ONLY LEADER TO RAISE THE ISSUE OF ELAM TAMIL PEOPLES

By avudaiappan
1/2/2010 5:50:00 AM

Why you not joined to kani mozhi.. you will get what you want..or why you not joined to other family of karunanithy

By dmk tamilan
1/2/2010 5:34:00 AM

we will definetly give RAJYA SABHA SEAT TO YOU vaiko

By TAMILAN ILLAKUVANA
1/2/2010 5:31:00 AM

Vaiko Keep the pressure on central and State. Tamils needs not food and cloths they wants dignity and self government.

By Arichandran
1/2/2010 4:26:00 AM

தமிழரின் தாகம் தமிழ் ஈழ தாயகம் நன்றி வைகோ அவர்களே

By poovalingam
1/2/2010 4:19:00 AM

நன்றி வைகோ அவர்களே நன்றி

By usanthan
1/2/2010 3:23:00 AM

Thank you VIKO

By kumar
1/2/2010 3:01:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
ஆட்சியைக் கவிழ்க்க எண்ண வேண்டாம்: முதல்வர்



இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை, சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார் முதல்வர் கருணாநிதி. உடன், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், வருவாய் மற்று
சென்னை, ஜன.1: "குற்றங்களைப் பெரிதாக்கி திமுக ஆட்சியை கவிழ்க்க எண்ண வேண்டாம்'' என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார், கருணாநிதி. இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது:"கடந்த 2001-ம் ஆண்டில் வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. காரணம், அந்த ஆண்டில் தேர்தல் முடிந்து வேறு ஆட்சி வந்தது. அவர்கள் இந்தத் திட்டத்தை நிறுத்தி விட்டார்கள். திமுக அரசு இப்படி நிறுத்தியிருந்தால், வாரந்தோறும் சென்னை, திருச்சி, மதுரை, வேலூர், விழுப்புரம் என்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று இருக்கும். இப்போது அப்படி நடைபெறாமல் இந்தத் திட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.நிறுத்தப்பட்டதற்குக் காரணம்: 2001-ம் ஆண்டு நிறுத்தப்பட்ட இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், 2002, 2003-ம் ஆண்டுகளில் நிறைவேற்றப்படவில்லை.ஆனால், 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. அந்த ஆண்டு இந்தத் திட்டத்தை மீண்டும் அன்றிருந்த ஆட்சியாளர்கள் அரைகுறையாக நிறைவேற்றினார்கள்.திமுகவைப் பொறுத்தவரை, தேர்தலுக்காக அல்ல; கட்சி அரசியலுக்காக அல்ல, மக்களை மகிழ்ச்சியடையச் செய்ய பொங்கல் கொண்டாடுகின்ற அந்த நாளிலாவது அவர்கள் பூரிப்போடு இருக்க வேண்டும். இதனால், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினோம். ஒரு அரசு மக்களுக்காக இருக்கின்ற அரசு; தேர்தலுக்காக இருக்கின்ற அரசு அல்ல என்பதை எடுத்துக் காட்டுகின்ற வகையில் இந்தத் திட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.குறை இல்லாமல்: ஒரு நாட்டில் ஒரு அரசு, அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அந்த மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும். அதை குறை கூறுபவர்களும் இருப்பார்கள். குறை இல்லாமல் ஒரு அரசு இருக்க முடியாது. குறை இருந்தால் சொல்லுங்கள்; கேட்கிறோம். குற்றம் இருந்தால் கண்டியுங்கள்; தண்டியுங்கள். அதற்குப் பணிகிறோம் என்பதுதான் இந்த அரசின் கொள்கை, லட்சியமாக இருந்து வருகிறது.குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே குறை சொல்லிக் கொண்டிருந்தால் அது ஜனநாயகம் அல்ல. குறை கண்ட இடத்தில் அதைச் சொல்வதும், அதைத் திருத்திக் கொள்வதும்தான் ஜனநாயகம்.நிலவுக்கே களங்கம்: நிலவுக்கே களங்கம் இருப்பதாகச் சொல்கிறோம். அதைப் போல முழு நிலவாக இருந்தாலும் எங்கேயோ ஒரு கரும்புள்ளி இருக்கத்தான் செய்யும். அதைச் சுட்டிக் காட்டி இந்த அரசோடு ஒத்துழைத்து அதை நீக்குவதற்குப் பாடுபட வேண்டும். அதையே குற்றமாகச் சொல்லி அந்தக் குற்றத்தையே பெரிதாக்கி நிலவு பெரிதா, அதிலே இருக்கின்ற களங்கம் பெரிதா என்பதில் போட்டி போட்டுக் கொண்டு களங்கத்தைப் பெரிதாக்கி ஆட்சியைக் கவிழ்த்து விடலாம்; ஆட்சியை ஒழித்து விடலாம் என யாரும் கருதக் கூடாது'' என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.
கருத்துக்கள்

படிப்பதற்கு நன்றாக உள்ளது. குறையைக் கேட்டால் களைவார் என்னும் நம்பிக்கையுடனே கேட்கின்றேன். முதல்வரின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு துறையில் மிகப் பெரும் ஊழல்கள் நடந்துள்ளன. அவற்றை வெளிப்படையாகத் தெரிவிக்கவும் தெரிவித்தபின் உரியவர்களைத் தண்டிக்கவும் செய்வாரா மாண்புமிகு முதல்வர் அவர்கள்? இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் எனும் திருவள்ளுவர் வாக்கை நினைந்து கூறுபவரைப் பழி வாங்காமல் கூறப்படும் குறையை உடனே சரி செய்ய முன் வருவாரா? நம்பிக்கையுடன் இலக்குவனார் திருவள்ளுவன் (இதனைப் படிக்கும் அதிகாரிகள் மாண்புமிகு முதல்வரின் கவனத்திற்கு இதைக் கொண்டு செல்ல வேண்டுகிறேன். நன்றி.)

By Ilakkuvanar Thiruvalluvan
1/2/2010 5:16:00 AM

தமிழகத்தைப் பிடித்த இந்தப் பீடை என்றுதான் ஒழியுமோ?

By தமிழன்
1/2/2010 4:27:00 AM

இந்த கருணா பிணத்தை இன்னும் எரிக்கவில்லையா!! வெகு சீக்கிரத்தில் தமிழ் நாடு நாற்றம் எடுக்க போகிறது இந்த பிணத்தால்.

By usanthan
1/2/2010 3:20:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்க வேண்டாம்: ஜெயலலிதா அறிக்கை



சென்னை, ஜன.1: தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை பறிக்கும் வகையில் செயல்பட வேண்டாம் என தமிழக அரசுக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:கடந்த மூன்றரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தொழில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. 50 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு, வேலைக்காக காத்திருக்கிறார்கள்.இந்நிலையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்கு மாறாக, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களை ஒப்பந்த முறையில் நியமிக்கும் வகையில் ஓர் அரசாணையை வெளியிடச் செய்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி. இது "ஒப்பந்த முறை அறவே நீக்கப்படும்' என்ற தி.மு.க.வின் வாக்குறுதிக்கு மாறாக உள்ளது.மொத்தத்தில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பையே ஒழித்துக் கட்டும் பணியில் கருணாநிதி ஈடுபட்டிருக்கிறார்.இந்த அரசாணையின்படி, இப்போது அரசுத் துறைகளில் அனைத்து மட்டங்களிலும் காலியாக உள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களைக் கொண்டு துறைத் தலைவர்களே ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிக் கொள்ளலாம். தி.மு.க. அரசின் இந்த செயல் இளைய சமுதாயத்தினரின் உரிமையைப் பறிப்பதாகும்.பொது நலன் கருதி, அரசு விரும்பினால், எந்த அரசு ஊழியரின் பணிக் காலத்தையும் நீட்டித்துக் கொள்ளலாம். இதுதான் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு. ஆனால் அனைத்து மட்டங்களிலும் காலியாக உள்ள பணியிடங்களை ஓய்வு பெற்றவர்களைக் கொண்டு நிரப்பிக் கொள்ளலாம் என்று ஒட்டுமொத்தமாக ஓர் அரசாணை பிறப்பித்திருப்பது மரபு மீறிய செயல்.இது லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் செயல். பணியில் இருக்கும் அரசு ஊழியர்களின் பதவி உயர்வை பாதிக்கும் செயல். ஏழைகளை தொடர்ந்து ஏழைகளாகவே இருக்க வைக்கும் செயல். தி.மு.க. விசுவாசிகளை பணியமர்த்துவதற்கான சதித் திட்டம்.பொதுவாக அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்கள் தேர்வாணையம் அல்லது வேலைவாய்ப்பகங்கள் மூலம் இளைஞர்களைக் கொண்டு நிரப்பப்படும். ஆனால் இதுவரை நடைபெறாத வகையில், அனைத்து மட்டங்களிலும் உள்ள காலியாக உள்ள இடங்களை ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களைக் கொண்டு நிரப்பப்படும் என்று தி.மு.க. அரசு அறிவித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.இதனால் தி.மு.க.வுக்கு வேண்டியவர்கள் மட்டுமே பணியமர்த்தப்படும் நிலை ஏற்படும். இது போன்ற நியமனங்கள் மக்கள் விரோதச் செயலுக்கு வழிவகுக்கும். இதனால் தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடும். தி.மு.க. அரசின் இந்த அரசாணை மொத்தத்தில் ஊழலுக்கு வித்திடும் செயல் ஆகும்.மேலும், தி.மு.க.வினர் தங்களுக்கு வேண்டிய ஊழியர்களை நியமித்து, வரும் 2011 தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் முறைகேடுகளை செய்ய திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.இளைய சமுதாயத்தினருக்கு எதிரான, ஊழலுக்கு துணைபோகின்ற, ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கின்ற இந்த அரசாணையை வெளியிட்ட தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த அரசாணை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்கள், வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதத்தில், இளைஞர்களைக் கொண்டு முறைப்படி நிரப்பப்பட வேண்டும் என ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
கருத்துக்கள்

சாத்தான் வேதம் ஓதுதல்

என்பதற்கு எடுத்துக் காட்டாக

இந்த அறிக்கையை எடுத்துக் கொள்ளலாம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.

By Ilakkuvanar Thiruvalluvan
1/2/2010 5:07:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 1 ஜனவரி, 2010

ரணடைந்த புலிகளின் தலைவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது

31 December, 2009 by admin

சரணடைந்த புலிகளின் தலைவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது டி.பி.எஸ். ஜெயராஜ் கூறுகிறார்

சரணடைவதாக முடிவு செய்த விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன், தம்மை சரணடையக்கோரிய சிறிலங்கா அரசையோ இராணுவத்தினரையோ நம்பாவிட்டாலும்கூட காயமடைந்த போராளிகள், பொதுமக்கள் ஆகியோரை காப்பாற்றவேண்டும் என்ற நோக்குடனேயே சரணடைவதாக முடிவெடுத்தார்கள் என்று சரணடைவதற்கு முன் கடைசி நேரத்தில் நடேசனுடன் பேசிய அவரது நண்பரை மேற்கோள் காட்டி ஊடகவியலாளரும் பத்தி எழுத்தாளருமான டி.பி.எஸ்.ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.

இறுதிப்போரின்போது சிறிலங்கா இராணுவத்தின் முக்கிய படையணிகள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கடைசிநிலப்பகுதியை முற்றாக சுற்றிவளைத்து முற்றுகைக்குள் கொண்டுவந்தவுடன், விடுதலைப்புலிகளின் தலைமை முக்கிய திட்டம் ஒன்றை வகுத்தது. அதன்படி, விடுதலைப்புலிகளின் ஒரு அணி இராணுவத்தினருக்கு எதிரான கடைசி நேர இழப்புக்களை கொடுக்கும் தாக்குதல்களை வழங்குவது என்றும் அப்போது இன்னொரு அணி ஊடறுப்பு ஒன்றை மேற்கொண்டு முற்றுகைக்குள்ளிருந்து வெளியேறுவது என்றும் காயமடைந்த போராளிகள் மற்றும் அரசியல்துறையினர் உள்ளடக்கிய மற்றைய அணி இராணுவத்தினரிடம் சரணடைவது என்றும் இந்த திட்டம் வகுக்கப்பட்டது.

இதன்படி, சரணடைதல் தொடர்பான விடயத்தை விடுதலைப்புலிகள் அரசியல்துறைபொறுப்பாளர் பா.நடேசன் மேற்கொண்டார். சரணடைவது தொடர்பான நடைமுறையை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது தொடர்பாக சிறிலங்கா அரசுடன் பேசுவதற்கு பல்வேறு தரப்புக்களுடனும் அவர் தொடர்புகொண்டு பேசினார். ஐரோப்பிய நாடுகளின் இரண்டு அமைச்சர்கள், கொழும்பிலிருந்த மேற்குலக நாடுகளின் மூன்றின் தூதுவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டு உயரதிகாரிகள், பிரிட்டன் ஊடகவியலாளர் ஒருவர், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் ஆகியோருடன் தொடர்ச்சியாக செய்மதி தொலைபேசியில் பேச்சுக்களை நடத்தினார்.

மே 18 ஆம் திகதி அதிகாலை 6.30 மணியளவில் நடேசனை தொடர்புகொண்ட சந்திரகாந்தன் எம்.பி. - சரணடையும் விடுதலைப்புலிகளின் பாதுகாப்புக்கு சிறிலங்கா அரசு உத்தரவாதமளித்திருப்பதாகவும் அதனால் சரணடையும்படியும் தான் மாலை வந்து சந்திப்பதாகவும் கூறியுள்ளார்.

இதற்குபின்னர், மேற்குலக நாடொன்றிலுள்ள தனது நண்பருடன் பேசிய நடேசன், தமக்கு இந்த சரணடைதல் விடயத்தில் சிறிலங்கா அரசின் மீதோ இராணுவத்தின் மீதோ நம்பிக்கை இல்லை என்றும் காயமடைந்துள்ள போராளிகள் மற்றும் மக்களை காப்பாற்றுவதற்காக இந்த முடிவை எடுப்பதாகவும் சரணடைவதிலும்விட நஞ்சருந்தி சாவது மேல் என்றும் கூறியுள்ளார்.

இதன்பின்னர், சரணடையும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்பிரகாரம், நடேசன், புலித்தேவன் ஆகியோர் தலைமையில் 10 முதல் 15 பேர் வரையிலானோர் முன்னே வெள்ளைக்கொடியை ஏந்தி செல்வது என்றும் அவர்களுக்கு பின்னால் குறிப்பிட்ட தூரத்துக்கு பின்னால் தளபதி ரமேஷ் மற்றும் இளங்கோ தலைமையில் 30 முதல் 40 வரையிலானோர் வெள்ளைக்கொடியுடன் நடந்து செல்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. சிறிலங்கா இராணுவத்தின் மனிதநேயம் அறவே இல்லாத 59 ஆவது டிவிஷன் படையணியைவிட 58 ஆவது டிவிஷன் படையணியிடம் சரணடைவதற்கே விடுதலைப்புலிகள் விரும்பினர். அதற்கேற்ப தாம் 58 ஆவது டிவிஷன் படையணியிடம் சரணடைவதாக அவர்கள் அறிவித்திருந்தனர்.

ஆனால், சரணடைவது தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் சரணடையும் இடமாக தீர்மானிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் 59 ஆவது டிவிஷன் படையணியின் தளபதி பிரசன்ன டி சிலவா, தனது படையணியின் நான்கு குழுவினரை நகர்த்தினார். 59 ஆவது டிவிஷன் படையணியின் கோல்வ் பிரிவு கப்டன் சமிந்த குணசேகர தலைமையிலும் ரோமியோ பிரிவு கப்டன் கவிந்த அபயவர்த்தன தலைமையிலும் எக்கோ பிரிவு கப்டன் கோசல விஜயக்கோன் தலைமையிலும் டெல்டா பிரிவு கப்டன் லசந்த ரட்ணசேகர தலைமையிலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

கோல்வ் மற்றும் ரோமியோ பிரிவுகளுக்கு மேஜர் மகிந்த ரணசிங்கவும் எக்கோ மற்றும் டெல்டா பிரிவுக்கு மேஜர் விபுலதிலக்கவும் இந்த படைப்பிரிவுகளின் கூட்டுப்பொறுப்பு கேணல் அத்துல கொடிப்புலியிடமும் வழங்கப்பட்டது.

அப்போது, நடேசன்,புலித்தேவன் அடங்கிய முதல் தொகுதியினர் (10 - 15 பேர்) கைகளில் வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்காக வந்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு பின்னால், குறிப்பிட்ட தூரத்தில் இரண்டாவது தொகுதியினர் ரமேஷ், இளங்கோ தலைமையில் (40௪5 பேர்) சரணடைவதற்கு வந்துகொண்டிருந்தனர்.

நடேசனது தொகுதியினரை சுற்றிவளைத்த படையினர் அவர்களை தமது காவலரண் பகுதிக்கு அழைத்து சென்ற அதேவேளை, ரமேஷ் தலைமையிலானவர்களை சுமார் 100 மீற்றர் தொலைவில் வெள்ளைக்கொடியை உயர்த்திப்பிடித்தவண்ணம் நிற்குமாறு உத்தரவிட்டனர்.

காவலரண் பகுதிக்குள் கூட்டிச்செல்லப்பட்ட நடேசன் குழுவினர் தரையில் முழங்காலில் நிற்கமாறு பணிக்கப்பட்டனர். அதன்பின்னர், சிங்களத்தில் தகாத வார்த்தைகளால் நடேசனை திட்டிய இராணுவத்தினர், அவர்களை சுடுவதற்கு தயாராகினர். சிங்களப்பெண்ணான நடேசனின் மனைவிக்கு அது விளங்கிவிட்டது. உடனே, வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த தனது கணவரை சுடவேண்டாம் என்று அழுதுகுழறியபடி எழுந்துசென்று கணவனுக்கு அருகில் செல்ல, கண்ணிமைக்கும் நேரத்தில் நடேசனும் அவரது மனைவியும் புலித்தேவனும் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஏனையவர்களையும் சுடுவதற்கு முயற்சித்தபோது, அங்குநின்றுகொண்டிருந்த உயரதிகாரிகள் சுடுவதை நிறுத்தும்படி கூறியதை அடுத்து தாக்குதல் நிறுத்தப்பட்டது.

இவ்வேளையில், காவலரண் பகுதிக்குள் கூட்டிச்செல்லப்பட்ட நடேசன் குழுவினர் சுட்டுக்கொல்லப்பட்ட சத்தத்தை கேள்விப்பட்ட ரமேஷ் குழுவினர் உடனடியாக தாம் வந்த வழியாக திரும்பி ஓடத்தொடங்கியுள்ளனர். அவர்களை நிற்கும்படி கத்தியபடி கலைத்துச்சென்ற படையினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஓடும்போது ஒருவரில் மோதி ஒருவர் விழுந்து தொடர்ந்து ஓட முடியாமல் அனைவரும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் விழுந்துவிட்டனர். இதனையடுத்து, கலைத்துச்சென்ற படையினர் அவர்களை அந்த இடத்திலேயே சரமாரியாக சுட்டும் கிரனேட் வீசியும் கொன்றுதள்ளியுள்ளனர். அந்தக்கூட்டத்திலிருந்து ஓருசிலர் மாத்திரம் படையினரால் வெளியே இழுத்தெடுக்கப்பட்டனர்.

இந்தப்படுகொலை படலம் போர் முடிவுற்றவேளையில் சிறிலங்கா இராணுவத்தினரால் நடத்தப்பட்ட மிகப்பெரிய கொடூரம். ஆனால், சரணடைவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு அதற்கான பேச்சுக்களும் நடத்தப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்க்கப்பட்டதாக தெளிவாக கூறப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது இன்னமும் பதில் இல்லாத கேள்வியாகவே உள்ளது.

அப்போது சீனாவிலிருந்த தன்னை கேட்காமல் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடையும் விடயத்தில் முடிவெடுத்துவிட்டார் என்ற சீற்றத்தில் பொன்சேகா சீனாவிலிருந்து சில விசேட கட்டளைகளை வழங்கி இந்த சம்பவம் நடைபெற்றதா?

அல்லது

இருதரப்புக்கள் மத்தியிலும் தொடர்பாடல் பிரச்சினையால் இந்த சம்பவம் இடம்பெற்றதா?

அல்லது

உயர்மட்டத்திலிருந்து வழங்கப்பட்ட உத்தரவு சரியாக களத்தில் நிறைவேற்றப்படாததால் இந்த சம்பவம் இடம்பெற்றதா - என்று எதுவும் புரியாத விடயமாகவே இது காணப்படுகிறது.

ஆனால், சர்வதேச சமூகத்தின் மத்தியில் ஆழமாக பதிந்துவிட்ட இந்த படுகொலை விடயத்தை சிறிலங்கா அரசு இலகுவில் மறைத்துவிடமுடியாது. இந்த விடயம் இலகுவாக மறைக்க கூடியளவுக்கு சிறிய சம்பவம் அல்ல.

கொடூரமான மனிதப்பேரழிவை பற்றி எழப்போகின்ற கரிசனைகளையும் அதனையொட்டி எழுப்பப்படபோகின்ற விசாரணைக்கான கோரிக்கைகளும் சிறிலங்கா அரசாங்கத்தால் ஒருபோதும் தவிர்க்கவோ அல்லது மறுக்கவோ முடியாது.

அவ்வாறான விசாரணைகள் வருகின்றபோது, தற்போது சர்வதேச அரங்கில் சிறிலங்காவை பாதுகாத்துவரும் ”சிறிலங்காவின் நண்பர்கள்” என சொல்லப்படுவோர், நெருக்கடியான நிலையொன்றுக்குள் தள்ளப்படுவார்கள்.

நன்றி: ஈழநேசன்


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 414
புதுமையோடு பிறந்த புத்தாண்டு

First Published : 01 Jan 2010 02:09:33 AM IST


ஒவ்வொருமுறையும் புத்தாண்டு பிறக்கும்போது நாம் புத்துணர்வு பெறுவோம், ஆனால் இந்த புத்தாண்டே புதுமையோடு பிறந்திருக்கிறது. 2009 ஆம் ஆண்டுக்கு விடைகொடுத்து, 2010 ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக ஆலயங்களில் சிறப்பு வழிபாடும், பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாபிலோனில்தான் முதல்முறையாக புத்தாண்டு கொண்டாப்பட்டதாக வரலாறு கூறுகிறது. அவர்கள் காலண்டரை அடிப்படையாக கொண்டு புத்தாண்டை கொண்டாடவில்லை. பாபிலோனிய மக்கள் புத்தாண்டு பிறப்பை 11 நாள்கள் கொண்டாடி இருக்கிறார்கள். அதேவேளையில் ரோமானிய மக்கள் புத்தாண்டு பிறப்பை மார்ச் மாதம் கொண்டாடி இருக்கிறார்கள். ரோமானிய மக்கள்தான் முதல்முறையாக காலண்டரை அடிப்படையாக வைத்து புத்தாண்டை கொண்டாடி இருப்பதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. ரோமானிய அரசில் சில மாற்றங்களுக்கு பின்னர் ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து புத்தாண்டு கொண்டாடப்பட்டுள்ளது. முதலில் அவர்கள் ஒரு ஆண்டுக்கு 445 நாள்கள் என கணக்கீட்டு இருந்தனராம். காலச்சக்கரம் வேகமாக சுழன்றதின் காரணமாக தற்போது, உலகம் முழுவதும் புத்தாண்டு பிறப்பு மதம், இனம், மொழி, நாடு, கலாசாரம் ஆகியவற்றைத் தாண்டி கொண்டாப்படுகிறது. இன்று உலகம் முழுவதும் ஒரே நாளில், புத்தாண்டு பிறப்பு கோலாகலமாக கொண்டாப்படுகிறது. இதுவரை பிறந்த எந்த புத்தாண்டுக்கும் இல்லாத தனிச்சிறப்பு, இந்த 2010 ஆம் ஆண்டு பிறப்புக்கு கிடைத்துள்ளது. 2010 புத்தாண்டு பிறப்பு சந்திரகிரகணத்தோடு பிறந்துள்ளது. இதுவரை அதாவது 1901-ல் இருந்து புத்தாண்டு தினத்தில் சந்திரகிரகணம் ஏற்பட்டதில்லை, தற்போதுதான் முதல்முறையாக புத்தாண்டில் சந்திரகிரகணம் ஏற்பட்டிருப்பதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 1901 -ல் இருந்து சந்திரகிரகணத்தை பற்றி விவரங்கள் இருப்பதால், அதற்கு முன்பு புத்தாண்டு பிறப்பின்போது சந்திரகிரகணம் ஏற்பட்டதா என்ற தகவல் இல்லை எனவும் வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதேபோல புத்தாண்டின்போது சந்திரகிரகணம் 2028 ஆண்டும், 2066 ஆண்டும் வரும் என கூறப்படுகிறது. புத்தாண்டு பிறப்பு நள்ளிரவு கேளிக்கைக்கும், கும்மாளத்துக்கும் உரிய நிகழ்ச்சியாக அண்மைக்காலமாக மாறி வருகிறது. ஆனால், புத்தாண்டின் மூலம் நமக்கு கிடைத்திருக்கும் புதிய வாய்ப்பையும், புதிய அத்தியாத்தையும் கொண்டு லட்சியத்தையும், நோக்கத்தையும் அடைய சபதம் ஏற்று பாடுபட வேண்டும் என்கின்றனர் அறிஞர்கள். அவ்வாறே புத்தாண்டு மூலம் நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை கொண்டு லட்சியத்தை அடைய இன்று முதல் பாடுபடுவோம்...
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கூடிக் கலையும் மாநாடாக இருக்காது: முதல்வர்



சென்னை, டிச. 31: ""கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கூடிக் கலையும் மாநாடாக இருக்காது'' என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.செம்மொழி மாநாடு குறித்து சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்துக்குப் பின், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:மாநாடு நடந்து முடிந்தது என்று இல்லாமல் வரலாற்றில் இந்த மாநாடு இடம் பெறக் கூடிய அளவுக்கு ஏதாவது செய்யப்படுமா?இது கூடிக் கலையும் மாநாடாக அல்ல; மாநாட்டு வெற்றிக்குப் பிறகு, இந்திய பேரரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழும் அமைய வேண்டும் என்பதைத் தொடர் நடவடிக்கைகள் மூலம் வலியுறுத்துவோம்.1968-ம் ஆண்டு உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற போது, சென்னையில் தமிழ் அறிஞர்களுக்கு சிலைகள் வைக்கப்பட்டன. இந்த மாநாட்டிலும் அப்படிப்பட்ட நோக்கம் இருக்கிறதா?அந்தக் கருத்து இன்றைய கூட்டத்தில் எடுத்துச் சொல்லப்பட்டது. அத்தகைய சிலைகள் யார் யாருக்கு குறிப்பாக எந்தத் தமிழ் அறிஞர்களுக்கு கோவையிலே வைக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்திருக்கிறோம்.தமிழக எதிர்க் கட்சிகளை மாநாட்டுக்கு அழைப்பீர்களா?எல்லோரையும் அழைத்தோம். நாங்கள் வருவதற்கில்லை என்று பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் நாங்கள் எழுதிய கடிதத்துக்கு பதில் அனுப்பி விட்டார்கள்.கடந்த காலங்களில் நடைபெற்ற மாநாடுகளை விட, இந்த மாநாடு எந்த விதத்தில் உயர்ந்ததாக இருக்கும்?எந்த விதத்தில் உயர்ந்ததாக இருக்கும் எனச் சொல்லி, மற்ற மாநாடுகளை பின்னுக்குத் தள்ள விரும்பவில்லை. அண்ணா முதல்வராக இருந்த போது நடத்திய மாநாடு உலகப் புகழ் பெற்ற மாநாடு. அவரது வழியில் அந்த மாநாட்டுக்கு ஒப்பான மாநாட்டினை கோவையில் நடத்துவோம்.உலகத் தமிழ் மாநாடு தஞ்சையில் நடந்த போது, அது அந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது. இப்போது, கோவை மாவட்ட வளர்ச்சிக்குத் திட்டங்கள் நிறைவேற்றப்படுமா?கோவை மாநகரில் மட்டுமல்ல, கோவையைச் சுற்றியுள்ள இடங்களிலும், கோவை மாவட்டத்திலும் பல சிறப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.மாநாட்டுக்கு ஆகும் செலவு பற்றி?அரசின் சார்பில் இந்த மாநாட்டுக்கு தரப்படுகின்ற நிதி ஒழுங்காகச் செலவு செய்யப்பட்டு, அதற்கான கணக்கு முறையாகக் காட்டப்படும்'' என்றார் முதல்வர் கருணாநிதி.
கருத்துக்கள்

இந்தியப் பேரரசின் மொழியாகத் தமிழ் அமைய எடுக்கும் முயற்சிகளுக்குப் பாராட்டுகள். அதே நேரம் தமிழ் மொழி தமிழ் நாட்டில் உண்மையான ஆட்சி மொழியாகக்,கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, தனியார் அலுலகங்களிலும் மத்திய அரசின் அலுவலகங்களிலும் பிற மாநில அரசு அலுவலகங்களிலும் தமிழ் நாட்டில் தமிழே அலுவல் மொழியாக, நீதி மன்ற மொழியாக, வணிக மொழியாக அமைய நடவடிக்கை எடுகக வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/1/2010 3:56:00 AM

tamil ina throgi no 1... cunning old fox... selfish bastard

By babu
1/1/2010 3:06:00 AM

ஈழத் தமிழர்கள்தமிழக மீனவர்களின் அழிவை தடுக்காத இவருக்கு தமிழ் பேசக் கூட உரிமையில்லை. உலகத் தமிழர்கள் யாரும் இந்த மாநாட்டை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. உன் மீது படிந்த "துரோகி" கறை எத்தனை நூறு வருடங்கள் ஆனாலும் கழுவ முடியாது தன்னைப் பற்றி தமிழறிஞர்களை துதிபாட வைக்கத்தான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை கருணாநிதி நடத்துகிறார் மக்களை எப்படி கொடுமை படுத்துவது எப்படி கொல்வது , அதை எப்படி மூடி மறைப்பது என்பது பற்றி ஆராச்சி நடத்தவே இந்த மாநாடு

By usanthan
1/1/2010 1:49:00 AM

மானமுள்ள தமிழர்கள் ஒவ்வொருவரும் இ‍ந்த தமிழின துரோகி கருணாநிதியின், சுய விளம்பரத்திற்க்காக நடத்தப்பட போகும் இம்மாநாட்டை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். மக்களை எப்படி கொடுமை படுத்துவது எப்படி கொல்வது , அதை எப்படி மூடி மறைப்பது என்பது பற்றி ஆராச்சி நடத்தவே இந்த மாநாடு

By usanthan
1/1/2010 1:45:00 AM

ஆம்மாம் கூடிக் கலையும் மாநாடாக இருக்காது: கனிமொழிக்கு இன்னொரு பணக்கார கள்ள புருசனுக்கு கூட்டி குடுக்கும் மகாநாடக இருக்கும். எவனாவது வெளி நாட்டு இழிச்சவயேன் மாட்டுவான் என்ற எதிர் பார்ப்போடு இந்த மாநாடு

By bavani
1/1/2010 12:35:00 AM

www.uploadhouse.com/viewfile.php?id=5007380 www.uploadhouse.com/viewfile.php?id=5007379 www.uploadhouse.com/viewfile.php?id=5007381 தயவு செய்து இந்த படங்களை மற்றவர்களுக்கும் புத்தாண்டு செய்தியாக அனுப்புங்கள்

By bavani
1/1/2010 12:31:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்